Vijay: விஜய் இப்போது அரசியலுக்கு வந்து விட்டார். வந்த வேகத்திலேயே இரு பெரும் கட்சிகளுக்கு ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார். அதேபோல் மீடியாக்களும் இவரை வைத்து லாபம் பார்த்து வருகின்றன.
அதேபோல் திரைலகில் கூட இப்போது இவருடைய ரெஃபரன்ஸ் வைத்த படங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. உடனே விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன இதை வைத்து ஒரு புது உருட்டு பரவுகிறது.
அதாவது சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தெறி படத்தின் ரெஃப்ரன்ஸ் இருக்கும். அதேபோல் கடந்த வாரம் வெளிவந்த பறந்து போ படத்திலும் லியோ ரெஃபரன்ஸ் இருக்கிறது.
இது என்னடா புது உருட்டா இருக்கு
இப்படமும் தற்போது விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் வசூலும் நன்றாக இருக்கிறது. உடனே தளபதி ரசிகர்கள் அவருடைய ரெஃப்ரென்ஸை படத்தில் வைத்ததால் தான் படங்கள் ஹிட் ஆகிறது என பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்.
உடனே மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இதையெல்லாம் கூடவா ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்கீங்க. சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு என கலாய்த்து வருகின்றனர்.
அதேபோல் டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றிக்கு மம்பட்டியான் பாடலும் ஒரு காரணம். ஆனால் எங்க போனாலும் உங்க பெருமையை தண்டோரா போடுறீங்க என விஜய் ரசிகர்களுக்கு நெட்டிசன்கள் குட்டு வைக்கின்றனர்.