நடிகர் சரவணன் 90ஸ் காலகட்டத்தில் சில வெற்றிப் படங்களில் கதாநாயகனாக அறிமுகமானவர். அந்த நேரத்தில் அவரை “விஜயகாந்தின் தம்பி” என சிலர் அழைத்தனர். ஆனால் இது அவருக்கு பிடிக்காமல் இருந்ததாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
சரவணன் கூறுகையில், “விஜயகாந்த் உடன் என்னை ஒப்பிடுவது விருப்பமில்லை. விஜயகாந்த் ரசிகர் அல்ல, ரஜினி ரசிகன் தான்,” என தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் இரண்டு படங்களையே மட்டும் தான் பள்ளி நாட்களில் பார்த்திருக்கிறேன் என்றும் சொல்கிறார்.
கோபத்தில் சித்தப்பு சரவணன்
இதைத் தொடர்ந்து, விஜயகாந்த் வைத்து தான் சினிமாவிற்கு வந்தேன் என்று சிலர் நினைப்பது தவறு எனவும் அவர் கூறியுள்ளார். “அவர் பெரிய நடிகர் தான், ஆனால் அவருடன் ஒப்பிடப்படுவது எனக்கு வருத்தம் தான்,” என்றார். இந்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சினிமாவில் ஆரம்ப காலத்தில் வெற்றி பெற்ற சரவணன் பின்னர் சில படங்களை தயாரித்தும் வெற்றியடையவில்லை. அதன் பிறகு பருத்திவீரன் படத்தில் சித்தப்பா கதாபாத்திரம் மூலம் மீண்டும் திரையுலகில் அடியெடுத்தார். அதன்பின் வெப் சீரிஸ் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார்.
பல வருடங்களுக்கு பிறகு, ஜீ5 ஓடிடி தளத்தில் “சட்டமும் நீதியும்” என்ற வெப் சீரிஸில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த சீரிஸ் வழியாக ரசிகர்களிடம் மீண்டும் காட்சியளிக்கிறார். தற்போது மீண்டும் தனது கருத்துகளால் பேசுபொருளாகியுள்ளார்.
விஜயின் அரசியல் பயணத்தை பற்றி பேசும்போது, “இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார், செய்யும் செயல்களைப் பார்த்து முடிவு செய்யலாம்,” என்றார். அவர் மீது எதிர்ப்போ, குறை கூறுவதோ இந்த நேரத்தில் சரியானது இல்லை என முடிவில் கூறினார்.