Ajith : வேண்டாம் என விரட்டி விட்டாலும் தல தல என அஜித்துக்கு உயிரையே கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தனது கடின உழைப்பால் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்த தல அஜித்தின் படங்களை தயாரிப்பதற்கும் மற்றும் இயக்குவதற்கும் வாய்ப்பிற்காக சினிமாவில் நிறைய பேர் காத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
சினிமாவின் ஆரம்ப கட்டத்தில் 2002-ல் வில்லன் மற்றும் 2007-ல் வரலாறு போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் கே எஸ் ரவிக்குமார்.
இயக்குனரான சிறுத்தை சிவா அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் போன்ற இந்த 4 படங்களையும் இயக்கி ஹிட் கொடுத்தார்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் பில்லா மற்றும் ஆரம்பம் திரைப்படத்தை இயக்கி அஜித் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து H. வினோத் 2019 நேர்கொண்ட பார்வை படத்தில் ஆரம்பித்து வலிமை, துணிவு போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.
தற்போது பேட்டி ஒன்றில் H.வினோத் பேசியது வலைதளத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
” கடவுள் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை. என்னோட பார்வையில் என் கவலைகளை தீர்ப்பதற்கு அவர் உதவியாய் இருக்கிறார் அவ்வளவு தான். ஆனால் துகடவுளை வைத்து நான் வியாபாரம் செய்ய நினைக்கவில்லை. “.