Aishwarya Rai: அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அபிஷேக் தன்னுடைய மனைவி பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் காதலித்து கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது திருமணம் ஆகி சில வருடங்களிலேயே வெட்ட வெளிச்சமாக மீடியாக்கள் முன்னிலையில் தெரிந்தது. இதற்கு ஐஸ்வர்யா மீது இருக்கும் அதிகமான புகழ் வெளிச்சம் தான் காரணம் என்று கூட சொல்லப்பட்டது.
மனம் திறந்த அபிஷேக் பச்சன்
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பில் இருந்து இந்த தம்பதி விவாகரத்து செய்யப் போகிறார்கள். ஐஸ்வர்யா தன் மகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்று பேசப்பட்டது. மேலும் இந்த விவாகரத்திற்கு ஜெயா பச்சன் தான் காரணம் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் அபிஷேக் பச்சன் தன்னுடைய மனைவி பற்றி உருக்கமாக பேசி இருக்கிறார். தன்னுடைய மகள் ஆராத்யா எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும் இல்லை.
அவருக்கென்று தனியாக தொலைபேசி கூட கிடையாது. என் மகள் இப்படி வளர்வதற்கு காரணம் மனைவி ஐஸ்வர்யா ராய் தான். என் மகளை நல்ல முறையில் வளர்த்து வருகிறார் என்று பேசி இருக்கிறார்.
இதிலிருந்தே அபிஷேக் பச்சன் தன் மனைவி ஐஸ்வர்யா ராய் மீது மிகுந்த மதிப்பு மற்றும் மரியாதை வைத்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.