Mahabaratham : மஹாபாரதம் என்ற பாரம்பரிய வரலாற்று பின்னனி என்பது அனைவரும் அறிந்துகொள்ள கூடிய ஒன்று. இதை படிக்க படிக்க மேலும் ஆர்வத்தை தூண்டக்கூடிய கதை.
இந்த புராண கதைகளை மையமாக கொட்டிண்டு படம் எடுத்தால் அது மக்கள் மத்தியில் நன்றாக போய் சேரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு நல்ல கதையைத்தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
அந்தவகையில் தற்போது வந்துள்ள அப்டேட் தற்போது மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. அதுவும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளும் ஆரம்பாகிவிட்டது என்ற செய்தி நம்மை உற்சாகப்படுத்துகிறது.
கூலி பட பிரபலம் கொடுத்த cool அப்டேட்..
தமிழில் தற்போது கூலி படத்தில் நடித்து பிரபலமாக பேசப்படும் முன்னணி நடிகர் அமீர்கான் இந்த படம் என் ரத்தத்தில் உள்ளது. இந்த படத்தில் நடிக்க எனக்கு மிகப்பெரிய ஆசை என்றும், அதும் முக்கியமான கிருஷ்ணர் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தற்போது கூறியுள்ளார்.
அமீர்கான் தற்போது தமிழ் மொழியிலும் முன்னணி கதாநாயனாக ஹிந்தி மொழியிலும் பேர்போன நடிகராகவும் வலம் வருகிறார். இவர் நிறைய நல்ல படங்களை திரையுலகத்திற்க்கு கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், இந்த படத்தில் புது புது அறிமுக நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் இவர் அப்டேட் கொடுத்துள்ளார். மேலும் இதைப்பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.