Lokesh Kanagaraj : சினிமாவை பொருத்தவரையில் வெற்றி மற்றும் தோல்வி என்பது இரண்டுமே சாதாரணம் தான். ஆனால் இதில் வெற்றி படங்கள் மட்டுமே கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. அவ்வாறு 8 இயக்குனர்கள் தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்கள்.
இயக்குனர் பிரஷாந்த் நில் இதுவரை நான்கு படங்கள் இயக்கிய நிலையில் எல்லாமே ஹிட்டு தான். குறிப்பாக கே ஜி எஃப் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அடுத்ததாக பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மாரி செல்வராஜ்.
இவருடைய கர்ணன், மாமன்னன் மற்றும் வாழை படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை எடுத்து வருகிறார். அதேபோல் ராஜா ராணி படத்தின் மூலம் என்ட்ரியான அட்லீ பெரிய நடிகர்களின் படங்களை அடுத்து அடுத்து இயக்கினார்.
வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்த 8 இயக்குனர்கள்
அந்த வகையில் பாலிவுட் வரை சென்று ஜவான் என்ற ஆயிரம் கோடி வசூல் படத்தை கொடுத்திருந்தார். இப்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ஒரு படத்தை எடுத்து வருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கைதி, விக்ரம், மாஸ்டர் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
அவருடைய லியோ படம் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை கொடுத்தது. இப்போது ரஜினியின் கூலி படத்தை எடுத்துள்ள நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி அந்த படம் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக வெற்றிமாறன் தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.
கடைசியாக அவரது விடுதலை படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது சிம்புவை வைத்து படம் எடுத்து வருகிறார். தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அணில் ரவிபுடி. இவர் பகவான் கேசரி போன்ற 8 படங்களை இதுவரை இயக்கிய நிலையில் ஒரு தோல்வி படம் கூட கொடுத்ததில்லை.
ராஜ்குமார் ஹிரானி தற்போது வரை ஆறு படங்கள் இயக்கி இருக்கிறார். 3 இடியட்ஸ், டங்கி போன்ற படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. இவரும் வெற்றி இயக்குனர்களின் லிஸ்டில் இடம்பெற்றிருக்கிறார். முதலிடத்தில் கிட்டதட்ட 12 படங்களை இயக்கிய ராஜமௌலி இருக்கிறார். பாகுபலி போன்ற பிரம்மாண்ட படத்தை கொடுத்த ராஜமௌலி இதுவரை தோல்வியை சந்தித்ததில்லை.