Ajithkumar : நடிகர் அஜித் குமாரை பற்றி கூற வேண்டுமென்றால். தமிழ் சினிமாவில் அதிகளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகர் என்று கூறலாம். இந்த அளவிற்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் அமைந்தது இவரது நடிப்பை மட்டும் பார்த்து அல்ல. இவரது சொந்த வாழ்வையும், அவரது கஷ்ட நஷ்டங்களையும் பார்த்து சேர்ந்த கூட்டம் தான் இந்த ரசிகர் பட்டாளம்.
தமிழ் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் மற்றவர்களால் சரியாக பேசக்கூட தெரியாத நபர், ஆடத் தெரியாத நபர் என அனைவராலும் கேலி செய்யப்பட்டு, தற்போது தல என்னும் அடைமொழி பெயரோடு அன்பாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் அஜித்குமார்.
இவர் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர், நல்ல கணவர், நல்ல அப்பா, தன் லட்சியத்தில் வெற்றி கொண்ட ஒருவர், இவரால் இந்திய நாட்டிற்கும் பெருமை என இவரது பெருமைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம். சாதாரண மெக்கானிக்காக இருந்து, இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் அஜித்குமார் அவர்கள் அவர்களது கடின உழைப்பாலும், விட முயற்சியாலும் இந்த உயரத்தை அடைந்துள்ளார் என்றே கூறலாம்.
அவர் உடல்நிலை மோசமாக இருந்த போதிலும் அவர் எதிலும் பின்வாங்கவில்லை என்பதே இவரது பெருமை. இன்று உள்ள இளைஞர்களுக்கு மிக்பெரியா எடுத்துக்காட்டாக இருக்கிறார் அஜித்குமார். சொந்த வாழ்விலும் சரி, சினிமாவிலும் சரி அனைவராலும் வெறுக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார் என்பது மறுக்க முடியாத ஒன்று.
எல்லாத்தையும் திருப்தி படுத்தும் அஜித்..
இந்த காலத்தில் உள்ள நடிகர் எல்லாம் விவாகரத்து, குடும்ப பிரச்சினை, தகாத பொருள் பயன்படுத்துதல், பெண்கள் விவகாரம் என பல சிக்கலில் மாட்டி தவித்து கொண்டிருக்கும் போது. “ஒரு மகன் தன் தந்தைக்குச் செய்யக்கூடிய உதவி, ‘இவன் தந்தை என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் சொல்லும் படியான புகழைப் பெற்றுத் தருவதாகும்.” இந்த திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார்.
ஆமாம் எந்த ஒரு நடிகரால் சினிமா, குடும்பம் , அவருடைய பேஷன் , தான் பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்தல் என அனைத்திலும் முழுமனதுடன் கவனம் செலுத்தி வெற்றி நடை போடமுடியும். இவரை பார்த்து மற்ற நடிகர்கள் கற்றுக்கொள்ளலாம் என்று கூறுகிற அளவுக்கு வாழ்ந்து வருகிறார் அஜித்குமார். மேன்மேலும் அவர் பல உயரங்களை அடைய வேண்டும் என்பது மக்களின் மற்றும் ரசிகர்களின் ஆசையும் கூட.