Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு வீட்டுக்கு வந்ததும் ராஜி எந்த சூழ்நிலையில் கதிரை கல்யாணம் பண்ணினார் என்ற விஷயத்தை முத்துவேல் வடிவும் சொல்கிறார்கள். உடனே சக்திவேலும், ஆமாம் நான் விசாரித்து பார்த்தேன் ராஜி சொன்னது எல்லாம் சரிதான். அதனால் வீட்டிற்கு கூட்டிட்டு வருவதற்கு நான் எந்த விதமான எதிர்ப்பும் சொல்லவில்லை என்று சொல்கிறார்.
உடனே முத்துவேல் மற்றும் வடிவு இருவரும் சேர்ந்து பாண்டியன் வீட்டு வாசலில் நின்று ராஜியை கூப்பிடுகிறார்கள். ராஜி அம்மா அப்பா வந்து விட்டார்கள் என்ற சந்தோசத்தில் ஓடோடி வந்து பேசுகிறார். அப்பொழுது வடிவு, ராஜி கையை பிடித்து உனக்கு விருப்பமில்லாத இந்த வீட்டில் இருக்க தேவை இல்லை. நீ நம்ம வீட்டுக்கே வா என்று கூப்பிடுகிறார்.
அப்பொழுது பாண்டியனும் கோமதியும் பேச வந்த பொழுது முத்துவேல் நீங்க உங்க மகளை கூட்டிட்டு போகும் பொழுது நான் ஏதாவது பேசினேனா, இப்பொழுதும் நீங்கள் எதுவும் பேசக்கூடாது என்று சொல்லிவிடுகிறார். உடனே பாண்டியன் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய் விடுகிறார். ராஜி பதில் சொல்லாமல் கதிரிடம் சென்று வெளியே எங்க அப்பா அம்மா வந்து என்னை வீட்டிற்கு கூப்பிடுகிறார்கள்.
அவர்களிடம் நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார், அதற்கு கதிர் உனக்கு என்ன தோணுதோ அதை செய் என்று சொல்லி விடுகிறார். உடனே ராஜி வெளியே வந்து அரசி பயந்து போய் அவளுக்கு அவளே தாலி கட்டி அங்கு வந்திருந்தால், ஆனால் நான் அப்படி இல்லை. என் கழுத்தில் நானே தாலி கட்டவில்லை, கதிர் தான் எனக்கு தாலி கட்டி முறைப்படி ரிஜிஸ்ட்ரேஷனும் பண்ணிட்டோம்.
நான் பயந்தும் இங்கே வந்து இருக்கவில்லை, அத்துடன் இங்கு இருப்பவர்கள் என்னை நல்லபடியாக பார்க்கிறார்கள். இங்கே சந்தோசமாக இருக்கிறேன் எல்லாத்துக்கும் மேல எனக்கு கதிர் இந்த வீட்டில் இருக்கிறான். அவனை விட்டுட்டு என்னால் வர முடியாது, என்னுடைய லட்சியத்திற்காக அவன் எனக்கு நிறையவே செய்து விட்டான். என் அத்தை மாமா அக்கா என அனைவரும் என்னுடன் இருக்கும் பொழுது நான் அங்கே வரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறார்.
ராஜி சொல்ல சொல்ல பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சந்தோஷமாகி விட்டார்கள். முக்கியமாக கதிர் வானத்துக்கு பூமிக்கும் குதித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி விட்டார். ஆனால் ராஜியிடம் மட்டும் காட்டாமல் சண்டைக்கோழியாக வம்பு பண்ணுகிறார். தற்போது ராஜி மற்றும் கதிர் மனசில் என்ன இருக்கிறது என்று தெரிந்து விட்டது, அந்த வகையில் இவர்களுடைய காதல் வெளிவந்து மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழப் போகிறார்கள்.