மதராசி படம் கலையான விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபகாலமாக சிவகார்த்திகேயன் தொட்டதெல்லாம் வெற்றி பெற்று வருகிறது. கடைசியாக அவர் நடித்த அமரன் படம் அடித்த பம்பர் வசூலால் அடுத்த லெவலுக்கு போய்விட்டார்.
இன்று 40 முதல் 50 கோடிகள் வரை சம்பளம் கேட்கிறார். அவருக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தயாரிப்பாளரும் அவர் வாசிக்கும் மகுடிக்கு ஆடி வந்தனர். ஆனால் சமீபத்தில் வெளியான மதராசி படம் அவரின் அடுத்த கட்டத்திற்கு செக் வைத்தது.
சிவகார்த்திகேயன் தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சத்யஜோதி மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் ஒரு படம், அது போக தனது நண்பர் சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படமும் கமிட் ஆகியுள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரியுடன் ஒரு படத்தில் நடிக்க போகிறார். இப்படி அடுத்தடுத்து மூன்று பெரிய கூட்டணியை வளைத்து வைத்த அவருக்கு இப்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமரன் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் 40 முதல் 50 கோடிகளாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி விட்டார். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பராசக்தி படத்திற்கு பிராஃபிட் சேர் கேட்டுள்ளார். படம் 100 கோடிக்கு மேல் சம்பாதித்து விட்டால் அப்படியே பாதி இவருக்கு கொடுக்க வேண்டும்.
வெங்கட் பிரபு மற்றும் சத்தியஜோதி கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சிவகார்த்திகேயன் 40 கோடி சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த நிறுவனம் ஒத்துப் போகவில்லை. அவர்களும் பிராஃபிட் சேர் என்றால் சம்மதம் என்கிறார்கள்.
மதராசி படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் இடமே புஷ்கர் காயத்ரி படத்தையும் தயாரிக்க சிபாரிசு செய்துள்ளார் ஆனால் சிவகார்த்திகேயன் சம்பள விவகாரத்தால் மொத்த யுக்தியும் வீணா போய்விட்டது