100 டெஸ்ட் போட்டிகள் ஆடுவதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. 50 போட்டிகளுக்கு மேல் விளையாடிவிட்டாலே ஒருவருக்கு மகத்தான அனுபவம் கிடைக்கும். அப்படி இந்திய அணியில் பெரிய அளவில் டெஸ்ட் போட்டிகளில் அனுபவம் இருந்தும் ஒருமுறை கூட கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாத 5 வீரர்கள்.
சையத் ஹீர்மானி: கர்நாடகாவை சேர்ந்த இவர் கபில்தேவ் காலகட்டத்தில் இந்திய அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளார். 2759 ரன்கள் அடித்தும்,198 விக்கெட்டுகள் விழுவதற்கு காரணமாக இருந்த போதிலும் ஒரு முறை கூட கேப்டன் வாய்ப்பு பெறவில்லை
ஜாகீர் கான்: இந்திய அணிக்காக விளையாடிய பரோடா மாநிலத்தைச் சேர்ந்தவர். 92 போட்டிகள் விளையாடி உள்ளார். 11 முறை 5 விக்கெடுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக அதிகபட்சமாக 7 விக்கெட்களை ஒரு முறை வீழ்த்தியுள்ளார். இளம்புயல் தோனி வந்தவுடன் அவரை தூக்கி வைத்து கொண்டாடி இவரை டம்மியாக்கி விட்டார்கள். கேப்டன் பொறுப்பு கிடைக்கவே இல்லை.
விவிஎஸ் லக்ஷ்மன்: இவர் தன்னுடைய கேரியரில் 7 கேப்டன்களுக்கு கீழ் விளையாடி உள்ளார். 15 வருடம் விளையாடிய இவர் 134 போட்டிகள் விளையாடிய போதிலும் கேப்டன் பொறுப்பு கிடைக்கவே இல்லை. தோனி வந்தவுடன் இவர் பதவியும் பறிபோனது.
ஹர்பஜன்சிங்: 25 முறை இந்திய அணிக்காக 5 விக்கெட்டுகளை எடுத்து மகத்தான சாதனை புரிந்தவர்.103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 417 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 12 வருடங்கள் விளையாடியும் கேப்டன் பொறுப்பு வகிக்கவே இல்லை.
இஷாந்த் சர்மா: இந்திய அணிக்காக 97 போட்டிகள் விளையாடி உள்ளார் 11 முறை 5 விக்கெட் களை எடுத்துள்ளார் 18 வருடங்கள் விளையாடி வரும் இவருக்கு இதுவரை கேப்டன் பொறுப்பு கிடைக்கவில்லை. இவரும் 5 கேப்டன்களுக்கு கீழ் விளையாடி உள்ளார்