2019 ஆண்டு புல்வாமா தாக்குதல் நடைபெற்றது அதிலிருந்து இந்தியா பாகிஸ்தான் உறவு பாதிக்கப்பட்டு, கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதை பிசிசிஐ தவிர்த்து வந்தது. இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பஹால்காம் தாக்குதல் நடைபெற்று இரு நாட்டிற்கும் இடையே உறவு முற்றிலும் தடைபட்டது.
இதன் எதிரொலியாக லெஜெண்ட்ஸ்களுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உடனான போட்டியை புறக்கணித்தது. அரை இறுதியில் இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளவிருந்தது. ஆனால் இந்தியா தான் முக்கியம் என யுவராஜ் தலைமையில் இந்திய அணி பின்வாங்கியது.
இப்பொழுது 2025 ஏசியா கப் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் வரையறுக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த போட்டி நடைபெறுமா என்று தெரியவில்லை. செப்டம்பர் 9ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்தியா விளையாட உள்ள ஏசியா கப் லீக் போட்டிகள்:
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு சீரகம் ( செப்டம்பர் 10)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ( செப்டம்பர் 14)
இந்தியா மற்றும் ஓமன் ( செப்டம்பர் 19)
இந்திய அரசு விளையாட்டு உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் பாகிஸ்தானுடன் நல்லுறவை பேணுவதற்கு எதிராக உள்ளது. அதனால் திட்டமிட்டபடி இந்த போட்டி நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடைபெறுவதால் ஆதரவு பெருகி வருகிறது.
உலக லெஜெண்ட்ஸ் ஆப் சாம்பியன்ஸ் போட்டி தனியார் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது ஏசியா தேவையானது ஏசியா கிரிக்கெட் கவுன்சில்(ACC) நடத்துகிறது. இதனால் இந்த போட்டிகள் நடைபெற வாய்ப்பு இருந்தாலும் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிசிசிஐ தான் இதை தீர்மானிக்க வேண்டும்.