Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் கூப்பிட்டதும் அரசி தாலியை கழட்டி குமரவேலு முகத்தில் தூக்கி எறிந்து விட்டு வீட்டுக்கு வந்து விடுகிறார். வீட்டிற்கு வந்ததும் அரசிடம் பாண்டியன் பாசமாக பேசுகிறார். அப்பொழுது அன்றைக்கு நடந்த பிரச்சனையில் குமரவேலு சொன்னது தான் நீங்கள் நம்பி இருப்பிங்க.
நான் சொல்வதை நம்பவில்லை என்றால் நான் என்ன பண்ணுவது என்று எனக்கு தெரியவில்லை. உங்களிடம் நடந்த விஷயத்தை சொல்லவும் எனக்கு பயமாக இருந்தது அதனால் அவன் வீட்டுக்கே போகலாம் என்று முடிவு பண்ணி என் கழுத்தில் தாலி கட்டிக் கொண்டேன் என்று அரசி சொல்கிறார்.
இதைக் கேட்டதும் நான் அந்த அளவிற்கு உன்னை பயமுறுத்தி வைத்திருக்கேனா, நம்ம வீட்டுக்கு வருவதை விட அவன் கூட போவது ஓகே என்று முடிவு பண்ணி இருந்தாயா?? நீ இப்படி முடிவு எடுத்த பொழுதே நான் ஒரு அப்பாவாக தோற்றுப் போய்விட்டேன் என்று சொல்கிறார்.
பிறகு சரவணன், நீங்கள் எப்பொழுதுமே தோற்க மாட்டீங்க அப்பா. நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே என்று சொல்லி பாண்டியனை சமாதானப்படுத்துகிறார். ஆனால் அவ்வப்பொழுது தங்கமயில் மாமனார் மாமியாருக்கு ஜால்ரா தட்டும் விதமாக உண்மையை எப்போதுமே மறைக்க கூடாது சொல்லி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.
ஆனால் தங்கமயில் எத்தனை பொய் சொல்லி எவ்வளவு உண்மைகள் மறைத்திருக்கிறார் என்று மறந்துவிட்டார் போல. பாவம் மீனா மற்றும் ராஜிக்கும் தங்கமயில் போட்டு வந்திருந்த நகை போலி என்று தெரியும். சரவணனுக்கு தங்கமயில் படிக்கவில்லை என்று தெரியும்.
ஆனாலும் இவர்கள் எந்த உண்மையையும் சொல்லாமல் இருப்பதால் தங்கமயில் ஓவராக ஆடிக் கொண்டு வருகிறார். முக்கியமாக எந்த பொய்யும் சொல்லாத நல்ல மருமகள் என்ற நினைப்பு வேற இருக்கிறது. அதனால் அவ்வப்போது பச்சோந்தியாக மாறிக்கொண்டு மற்றவர்களை காயப்படுத்தி வருகிறார்.
இதற்கு பேசாமல் தங்கமயில் பற்றிய உன்னை வெளிவந்தால் தான் தங்கமயிலின் கொட்டம் அடங்கும். அடுத்ததாக இவ்வளவு விஷயத்தையும் செய்த குமரவேலும் மீது முத்துவேல் கோவப்பட்டு பேசுகிறார். ஆனால் தன் மகனை எதுவும் சொல்லக்கூடாது அவன் செஞ்சது சரிதான் என்று சக்திவேல், அண்ணனிடம் வாதாடுகிறார்.
பிறகு இவர்களுக்குள் வாக்குவாதம் வந்து சண்டையாகி விட்டது. இவர்களின் சண்டையை அப்பத்தா வந்து தடுத்து நிறுத்தி விடுகிறார். அந்த வகையில் முத்துவேல் கொஞ்சம் கொஞ்சமாக சக்திவேல் மற்றும் குமார் செய்தது தவறு என்று கண்டித்து பாண்டியன் பக்கம் மனசு மாறிக்கொண்டு வருகிறார்.
அதிலும் ராஜிக்கு நடந்த கல்யாணம் பற்றி உண்மை தெரிந்து விட்டால் நிச்சயமாக முத்துவேல் கோமதியையும் பாண்டியனையும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார். ஆனால் இந்த உண்மை தெரிந்தால் பாண்டியன் வானத்துக்கு பூமிக்கும் ஆடுவார். இப்படி ஒவ்வொருவரும் ஒரு சில உண்மைகளை மறைத்துக் கொண்டு பாண்டியனை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.