Memes: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சோசியல் மீடியாவில் எப்போதுமே ட்ரோல் செய்யப்படுவது உண்டு. அதற்கு காரணம் அவர் ஆதாரம் இல்லாமல் பேசும் சில வார்த்தைகள் தான்.

அப்படித்தான் தற்போது அவர் வரலாற்று நிகழ்வையே மாற்றிவிட்டார். அதாவது காமராஜர் இறந்தபோது அறிஞர் அண்ணா அதிகமாக அழுதார் என பத்திரிகையாளர்கள் முன்பு அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் காமராஜர் இறப்பதற்கு ஆறு வருடங்களுக்கு முன்பே அண்ணா இறந்து விட்டார். இந்த செய்தி தெரியாமல் சீமான் எப்படி இப்படி ஒரு தகவலை சொல்லலாம் என சோசியல் மீடியாவில் இப்போது ஒரு கூட்டம் பொங்குகிறது.

அதேபோல் சீமானை கலாய்த்து பல மீம்ஸ் வைரலாகி வருகிறது. ஒரு வேளை அண்ணா டைம் ட்ராவல் பண்ணி வந்திருப்பாரு சீமான் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

நான் காமராஜரோட அண்ணன் அழுதாருன்னு சொன்னேன். காமராஜருக்கு அண்ணனே கிடையாது. இப்படி சீமானை கலாய்க்கும் பல மீம்ஸ் டிரெண்டிங்கில் இருக்கிறது.

அதேபோல் இப்படியெல்லாம் இவர் பேசுகிறார். ஆனால் செய்தியாளர்கள் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்ன நடக்குது இங்க என சிலர் ஆதங்கத்துடன் ட்வீட் போட்டு வருகின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவில் சீமான் பேசியது வைரலாகி வருகிறது. அது பற்றிய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

