தமிழ் சினிமாவில் சோதனை முயற்சிகளுக்கு பெயர்பெற்ற நடிகர் இயக்குநர் ஆர். பார்த்திபன், சமீபத்தில் கொடுத்த பேட்டியில் நடிகர் தனுஷ் குறித்து வைத்த பாராட்டுகள் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
“தனுஷ் ஒரு வேகமான ஃபிலிம் மேக்கர்!” என்கிறார் பார்த்திபன். “ஒரே படப்பிடிப்பு தளத்தில் பத்து பெரிய நடிகர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் தானே நடித்து காட்டி, எப்படி செய்யணும் என்று புரியவைக்கிறார். பேனா, பேப்பர் எதுவும் இல்லாமலே ஒரு நாள்ல இரண்டு சீன்ஸ் செம கிளாரிட்டியோட முடிச்சிடுறார்!”.
படப்பிடிப்பு தளத்தில் சிக்கல் ஏதும் ஏற்பட்டாலும், தனுஷ் அதனை கண நேரத்தில் சரி செய்து விடுவார். மேலும் “இயக்குனருக்கே சந்தேகம் வந்தா கூட, தனுஷ் மாதிரி கலைஞன் அங்கேயே தீர்வு சொல்லிடுவாரு!” எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்ல, இயக்குனராகவும் தனுஷ் தனக்கே உரிய ஸ்டைலில் இட்லி கடை படத்தில் புது பக்கம் எழுதப்போகிறார் என்றே அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.