Nayanthara: நடிகை நயன்தாரா கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளில் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வருவதால், அவருடைய மார்க்கெட் குறைவதற்குப் பதிலாக அதிகரித்தே வருகிறது. தற்போது அவரின் சம்பள விவகாரம் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாடா ஸ்கை விளம்பர சம்பளம்
நயன்தாரா சமீபத்தில் டாடா ஸ்கை பிசினஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார். மிகக் குறுகிய விளம்பரம் என்றாலும், அதற்காக அவர் வாங்கிய சம்பளம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 50 நொடிகள் ஓடும் அந்த விளம்பரத்துக்காக ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கணக்கில் பார்த்தால், ஒரு நொடிக்கு ரூ.10 லட்சம் என அவர் சம்பளம் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கே அதிகபட்சமாக 10 கோடி சம்பளம் பெறும் நயன்தாரா, தற்போது விளம்பரத் துறையிலும் ஆளும் நடிகையாக மாறியுள்ளார். இந்த சம்பள விவகாரம் சினிமா வட்டாரங்களில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக பேசப்படுகிறது.
நயன்தாரா ஆரம்ப காலங்களில் சரியான கதைகள் இல்லாததால் சினிமாவில் நிலை பெற சற்று நேரம் எடுத்துக் கொண்டார். ஆனால் சந்திரமுகி, கஜினி, போன்ற வெற்றி படங்கள் அவர் மார்க்கெட்டைப் பலமாக்கின. பின்னர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.
ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்ததாலும் அவருடைய தனித்த அடையாளம் உருவானது. ரசிகர்கள் “லேடி சூப்பர் ஸ்டார்” என்று அழைத்துப் பெருமைப்படுத்தத் தொடங்கினர். அந்த அளவுக்கு அவரது நடிப்பு, அழகு, ஸ்டைல் அனைத்தும் ஒரே பிளாட்பாரத்தில் சேர்ந்தன.
தற்போது சிரஞ்சீவியின் 157வது படத்திலும், கே.ஜி.எஃப் புகழ் யாஷுடன் ‘டாக்ஸிக்’ படத்திலும் நயன்தாரா கமிட்டாகியுள்ளார். பல மொழிகளில் புதிய படங்கள் உருவாகிக்கொண்டிருக்கும் நிலையில், நடிகையாக மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் நயன்தாரா வளர்ந்துள்ளதை டாடா ஸ்கை சம்பள விவகாரம் தெளிவாக காட்டுகிறது.