சொல்ல போனால் ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அடுத்த வாரம் 14ஆம் தேதி வியாழக்கிழமை உலகமெங்கும் கூலி ரிலீஸ் ஆக உள்ளது. சுதந்திர தின விடுமுறையில் எப்படியும் இந்த படம் ஒரு பெரும் தொகையை வசூலித்து விடும்.
இந்த வாரம் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் கூலி படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை ஒளிபரப்ப போகிறார்கள். படத்திற்கு எந்த ஒரு ஹைப் கொடுக்காமல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு நான்கு நாள் இடைவேளையில் இப்படி ஒரு ராஜதந்திரத்தை செய்கிறார்கள் சன் பிக்சர்ஸ்.
இதை போல் தான் ஜெய்லர் படத்திற்கும் ஒரு பிரமோஷன் கொடுத்து பட்டையை கிளப்பினார்கள். அந்த லாஜிக்கை தான் இப்பொழுது கூலி படத்திற்கும் பின்பற்றுகிறது சன் பிக்சர்ஸ். இப்படி செம ஐடியா செய்து ப்ரமோஷன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தாலும் ஒரே ஒரு கரும்புள்ளியால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கூலி படத்திற்கு சென்சார் போர்டு “A” சர்டிபிகேட் கொடுத்துள்ளது. பொதுவாக லோகேஷ் கனகராஜ் படத்தில் ஆக்சன் மற்றும் இரத்தம் தெறிக்கக் கூடிய வயலன்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். இதனால் இதற்கு இப்படி ஒரு சர்டிபிகேட் கொடுத்து விட்டனர்.
இது நம் நாட்டில் ஒரு பிரச்சனை இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இதை மிகவும் கூர்ந்து கவனிப்பார்கள். அதனால் அங்கே குடும்பத்தோடு இந்த படத்தை பார்ப்பதற்கு தடை விதிக்கப்படும். அதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் இதற்கு நிச்சயமாக வருவதற்கு யோசிப்பார்கள். இந்த விஷயத்தை வெளிநாட்டு வசூல் பாதிக்கப்படும்.