Lokesh Kanagaraj : லோகேஷ், ரஜினி, அனிருத் காம்போவில் உருவாகி இருக்கும் கூலி படம் இன்று தியேட்டரில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் இந்தப் படத்துடன் ஏற்கனவே சில படங்களின் ஒற்றுமை இருக்கிறது.
அதாவது கூலி படத்தின் மையக்கருத்து பழிவாங்கும் படலம் தான். இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ், கமல் கூட்டணியில் விக்ரம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் கமலின் மகன் போ..தை பொருள் மாஃபியாவால் கொல்லப்படுகிறார்.
அதற்காக கமல் பழிவாங்குவது தான் விக்ரம் படத்தின் கதை. அடுத்ததாக ரஜினிக்கும் மிகப்பெரிய ஹிட் படம் என்றால் ஜெயிலர் படம் தான். இந்த படத்தில் தனது மகன் கடத்தல்காரர்கள் கடத்தப்பட்டுள்ளார் என்று அறிந்து ரஜினி பழி வாங்குகிறார்.
ஒரே கருவை வைத்து உருவான 3 படங்கள்
இப்போது லோகேஷ் மற்றும் ரஜினி இருவரும் கூட்டணி போட்டிருக்கும் கூலி படத்திலும் இதே பழிவாங்கும் கதைதான். அதாவது ரஜினியின் நண்பன் சத்யராஜ் ஆர்கன் மாஃபியாவால் கொல்லப்பட்டு இருக்கிறார். அதற்காக ரஜினி எவ்வாறு பழு வாங்குகிறார் என்பது தான் கூலி படத்தின் கதை.
தனது நண்பனை கொன்றவரை கூலியாக சென்று எவ்வாறு பழித்திருக்கிறார் என்ற சாதாரண கதையை எப்படி ஒரு ஆக்சன் மாஸாக கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு லோகேஷ் கொடுத்திருக்கிறார். சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் இதே போன்று ஒரே ஸ்டைலில் வெளியாகிறது.
இது ரசிகர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பு தரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் புதுவிதமான கதைகள் தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இதனால் பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கும் சில படங்களின் தோல்விக்கும் இது காரணமாக அமைகிறது.