Manikandan: தற்போது வளர்ந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் மணிகண்டன் முக்கியமானவராக இருக்கிறார். மற்ற ஹீரோக்களை போல் பறந்து பறந்து சண்டை போடுவது பஞ்ச் டயலாக் பேசுவது அதெல்லாம் அவர் செய்ய மாட்டார்.
எதார்த்தமான திரைக்கதை தான் அவருடைய சாய்ஸ். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். நான் போய் உலகத்தை காப்பாத்துற மாதிரி படம் எடுத்தால் நலவா இருக்கும். முதல்ல நான் என்ன காப்பாத்திக்கிறேன் என ஜாலியாக கூறியிருந்தார்.
அப்படி அவர் தேர்ந்தெடுத்து நடித்த குட் நைட், குடும்பஸ்தன் என எல்லாமே ஹிட் வரிசையில் இணைந்தது. உண்மையில் மக்களை தியேட்டருக்கு வரவழைத்த படங்களும் இதுதான்.
அந்த வரிசையில் தற்போது அவர் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார். எல்லாமே குடும்ப ஆடியன்ஸை இம்ப்ரஸ் செய்யும் கதைகள் தான். அதில் இப்போது அவர் பா ரஞ்சித் உதவியாளர் படத்தில் நடித்து வருகிறார்.
மக்கள் காவலனாக மாறிய குட் நைட் மணிகண்டன்
மக்கள் காவலன் என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படமும் ஒரு எதார்த்த கதைதான். இந்த படத்தின் சூட்டிங் முடிவதற்கு முன்பே அதே இயக்குனருடன் இன்னொரு படத்தையும் மணிகண்டன் கமிட் செய்து விட்டாராம்.
அப்படி என்றால் இந்த கூட்டணி அவருக்கு பிடித்திருக்கிறது. நிச்சயம் இது மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கை தான். அதனால்தான் மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது.
இந்த படம் வெளிவந்த பிறகு இவருடைய அடைமொழி பெயராக கூட மக்கள் காவலன் மாறலாம். விஜய் சேதுபதி எப்படி மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறாரோ அதேபோல் மணிகண்டன் மக்கள் காவலனாக மாறிவிடுவார் என்கிறது திரையுலக வட்டாரம்.