தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள், ஒரே நடிகர்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து பல படங்களை இயக்கிய இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கூட்டணி பற்றி இங்கு பார்க்கலாம்.
மணிவண்ணன் சத்யராஜை வைத்து அமைதிப்படை நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, ஜல்லிக்கட்டு போன்று மொத்தம் 25 படங்களை இயக்கியுள்ளார். இவை த்ரில்லர், அரசியல் நையாண்டி, ஆக்ஷன், குடும்பம் என பல்வேறு வகை கதைகளில் உருவாகி, அவரின் இயக்க திறனை வெளிப்படுத்தின. குறிப்பாக சத்யராஜ் நடித்த படங்களில், அவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒன்று .
எஸ்.பி.முத்துராமன் ரஜினிகாந்த் நடித்த பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை, தில்லு முல்லு ,தீ, நான் சிகப்பு மனிதன் , நான் அடிமை இல்லை , தர்மத்தின் தலைவன், முத்து போன்ற மொத்தம் 25 படங்களை ரஜினியுடன் இயக்கியுள்ளார். இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவர்ந்த முக்கிய காரணங்களில் ஒன்றாக திகழ்கிறது.
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை, வெற்றி, நீதியின் மறுபக்கம், வசந்த ராகம், பட்டணத்து ராஜாக்கள், ராஜ நடை போன்ற 19 படங்கள் முக்கியமானவை. இவை அவரது ஆக்ஷன், ரொமான்ஸ், சமூக நியாயம் என பல்வேறு வகை கதாபாத்திரங்களை வெளிப்படுத்தின. குறிப்பாக வெற்றி படத்தில் விஜய் சிறு வயது கலைஞராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ். ரவிகுமார் சரத்குமார் இணைப்பு தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்கள் வெளிவந்துள்ளது. நட்டாமை, நட்புக்காக, பாட்டாளி, சேரன் பாண்டியன், சமுத்திரம், ஜக்குபாய் போன்ற10 படங்கள் இவர்களின் கூட்டணியில் வெளிவந்தவை. இதில் நட்டாமை மற்றும் நட்புக்காக சரத்குமாருக்கு மாநில மற்றும் பிலிம்ஃபேர் விருதுகளை பெற்றுத் தந்தது, ஜக்குபாய் பிரஞ்சு படத்தின் ரீமேக் ஆகவும், வெளியீட்டில் சர்ச்சையை சந்தித்ததாகவும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட இயக்குநர் நடிகர் கூட்டணிகள் வெற்றிக்கு அடித்தளமாக இருந்து, ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம்பிடித்துள்ளன. இவை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் தனி அடையாளமாகத் திகழ்கின்றன.