அனிருத், ஆள் தான் பார்ப்பதற்கு நோஞ்சான் மாதிரி இருப்பார் ஆனால் செய்யும் வேலை எல்லாம் படு பயங்கரமாக இருக்கும். இசையமைப்பாளர்களில் அதிக சம்பளம் பெறும் நபர் இவர்தான். அதுவும் இந்த வயதில் இவ்வளவு வளர்ச்சி என்றால் இன்னும் இருக்கு ஏராளம்.
ரஜினியின் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் என்பது உலகமே அறிந்தது.ஆனால் அந்த படத்தின் இசை வேலைகளை கடைசி நேரம் வரை என்னால் முடிந்ததை செதுக்குவேன் என சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார் அனிருத். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டே இருக்கிறது.
கூலி படத்திற்கான BGM மாஸாக இருக்க வேண்டும் என செதுக்கி கொண்டே இருக்கிறார். படத்தின் சென்சார் வேலைகள் இருக்கிறது. அதனால் சன் பிக்சர்ஸ் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஜூலை இறுதிக்குள் படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து கொடுக்க வேண்டும் என கட்டளை போட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் அனிருத் விஜய் தேவர் கொண்டா நடிக்கும் “கிங்டம்” படத்தின் இசை வேலைகளை செய்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது அதனால் ஒருசேர அந்த வேலையையும் முடித்துக் கொடுக்க வேண்டும். இதற்காக 11 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார் அனிருத்.
அது மட்டும் இல்லாமல் கூலி அனிருத் வாங்கிய சம்பளம் 11 கோடிகள். இதுபோக கீது மோகன்தாஸ் இயக்கிக் கொண்டிருக்கும் “டாக்ஸிக்” படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கு அவர் வாங்கியது 12 கோடிகள். இந்த படம் யாஸ், நயன்தாரா என பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படி கைவசம் மூன்று பெரிய படங்கள் வைத்துக்கொண்டு கஜானாவையும் நிரப்பி வருகிறார்.