Vanitha Vijayakumar: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் இளையராஜா செய்துவிட்டு மாட்டி இருக்கிறார். தன்னுடைய பட பாடல்களை முன் அனுமதி இன்றி திரைப்படங்களில் பயன்படுத்தினால் இளையராஜா அதற்கு காப்புரிமை கேட்பது உண்டு.
அப்படித்தான் சமீபத்தில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் இளையராஜாவின் சிவராத்திரி தூக்கம் போச்சு பாடல் இடம்பெற்றது. இதை தொடர்ந்து வழக்கம் போல இளையராஜாவும் காப்புரிமை கேட்டு வழக்கு தொடுத்தார்.
இளையராஜாவை கதறவிடும் வனிதா
ஆனால் அவரே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டை தூக்கி அவர் தலை மீது வைத்து விட்டார் வனிதா. நான் அந்த வீட்டுக்காக ரொம்ப உழைச்சிருக்கேன், அந்த வீட்ல இருக்கவங்க கூட எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது என்று பேச ஆரம்பித்து அந்த குடும்பத்திற்கு நான் மருமகளாக போக வேண்டியவள் என்று குண்டை தூக்கி போட்டார்.
உடனே எல்லாரும் கார்த்திக் ராஜா தான் வனிதாவை என் காதலித்து இருப்பார் என்று பேச ஆரம்பித்தார்கள். இதைத் தொடர்ந்து வனிதாவே அந்த நபர் கார்த்திக் ராஜா இல்லை, அவர் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்று சொல்லிவிட்டார்.
இதிலிருந்து யுவன் சங்கர் ராஜாவை தான் வனிதா சொல்கிறார் என குரலில் செய்திகள் வெளியாக ஆரம்பித்துவிட்டது. அது மட்டும் இல்லாமல் அந்த வீட்டில் நிறைய பிரச்சனைகள் நடந்திருக்கிறது, அதையெல்லாம் நான் பேச விரும்பவில்லை என மறைமுகமாக இளையராஜாவை மிரட்டியே இருக்கிறார்.
காப்புரிமை கேட்டு ஒட்டுமொத்த சினிமாவில் உலகையும் கதற விட்டுக் கொண்டிருந்த இளையராஜாவையே கதற விட்டுவிட்டார் வத்திக்குச்சி வனிதா.