ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 6 அட்வென்ச்சர் படங்கள் – Cinemapettai

Tamil Cinema News

அட்வென்ச்சர் படங்கள் என்றாலே ஒரு வித்தியாசமான உலகத்துக்குள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அழைத்து செல்லும் தன்மை கொண்ட ஒன்று. இவற்றை நாம் வீட்டிலிருந்தபடியே ஓடிடி தளங்களில் ரசிக்கலாம். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

2016 ல் வெளிவந்த The Jungle Book திரைப்படம், ரட்யார்ட் கிப்லிங் எழுதிய புகழ்பெற்ற கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. சிறுவன் மோக்லி மற்றும் காட்டின் விலங்குகள் இடையிலான உறவுகள், பரபரப்பான சாகசங்கள் என மிகவும் கவர்ச்சிகரமாக படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களையும் ஈர்த்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் நீங்கள் காணலாம்.

2023ல் வந்த Indiana Jones and the Dial of Destiny படம், தொல்பொருள் ஆராய்ச்சியாளரான இன்டியானா ஜோன்ஸின் புது பயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. த்ரில்லிங் அனுபவம், பயணச் சவால்கள், புதையல் தேடல் என பரபரப்பான காட்சிகளால் நிரம்பிய இப்படம், ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் ஆனது. இதையும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்வையிடலாம்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 2016ல் வெளியான The Lost City of Z திரைப்படம், ஒரு பயோகிராபி அட்வென்ச்சர் படம். தொலைதூர காட்டுப் பயணங்கள், மனித மனத்தின் நிலைமை, மற்றும் வாழ்க்கையின் ஆழமான சந்தேகங்களைத் தழுவி எடுத்துள்ள இப்படம், அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் மனிதன் இயற்கையுடன் நடத்தும் போராட்டம் உணர்வுபூர்வமாகக் காட்டப்படுகிறது.

Jungle Cruise என்ற 2021ல் வெளியான திரைப்படம், பிரபல நடிகர் The Rock நடிப்பில் வெளிவந்தது. ஆக்ஷன், காமெடி, மற்றும் அட்வென்ச்சர் ஆகியவை கலந்து மிகுந்த பரபரப்பாக உருவான இந்தப் படம், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கேற்ற ஒரு கலர்ஃபுல் சாகச அனுபவமாக இருந்தது. இது ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

Jurassic திரைப்படத் தொடரில் டைனோசர்கள் மையமாக அமைக்கப்பட்ட கதைகள், பல தலைமுறைகளை திரையில் கட்டிப்போட்டவை. Jurassic Park முதல் Jurassic World வரை அனைத்துப் பகுதிகளும் மெகா ஹிட் ஆனவை. சமீபத்தில் வெளியாகிய Jurassic World Rebirth கூட பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் தளங்களில் நீங்கள் ரசிக்கலாம்.

2017ல் ராக் நடித்த Jumanji: Welcome to the Jungle திரைப்படம், புதிய தலைமுறைக்கு ஜுமான்ஜி கதையை புதுமையாக சொல்லும் விதமாக உருவானது. வீடியோ கேம் உலகத்தில் சிக்கிக் கொள்ளும் நால்வரின் சாகசங்களை கொண்டு ரசிகர்களை நகைச்சுவையுடனும் பரபரப்புடனும் கவர்ந்தது. இந்த திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்ஸ் தளங்களில் கிடைக்கிறது.

இவ்வாறாக, உலக அளவில் புகழ்பெற்ற சாகசங்களை உங்கள் வீட்டிலேயே தமிழ் சப்போர்டுடன் அனுபவிக்க இதுவே சரியான நேரம்

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.