Overseas business: கடந்த சில வருடங்களாகவே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளிநாடுகளில் எப்படி வியாபாரம் ஆகிறது என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு காரணம் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு வெளிநாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளத்தான்.
சில நேரங்களில் கதை அம்சம் நன்கு பொருந்தி போயிருந்தாலும் வெளிநாடுகளில் வசூல் அதிகம் இருக்கும். அப்படி அதிக அளவில் வியாபாரமான டாப் 5 இந்திய படங்களை பற்றி பார்க்கலாம்.
டாப் 5 இடத்தை பிடித்த படங்கள்
புஷ்பா 2: இந்த லிஸ்டில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த படம் வெளிநாடுகளில் 130 முதல் 135 கோடி வியாபாரம் செய்திருக்கிறது.
இந்த படத்தின் முதல் பாகம்தான் இரண்டாம் பாகத்தின் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் காரணம். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ஆயிரம் கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
கூலி: ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு ஆகஸ்ட் மாதம் வெளிவர இருக்கும் கூலி படம் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த படம் 92 கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளில் வியாபாரம் ஆகி இருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த மதிப்பு இன்னும் அதிகரிக்கவும் அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது.
RRR: ஆஸ்கார் விருதுவரை சென்று வந்த RRR 82 கோடிக்கு வெளிநாடுகளில் வியாபாரம் ஆகியிருக்கிறது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் நடிப்பில் வெளியான இந்த படம் இந்திய அளவிலேயே பல சாதனைகளை படைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்கி 2898AD: அமிதாப்பச்சன், கமலஹாசன் மற்றும் பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக கல்கி கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படம் பெரிய அளவில் இந்தியாவிலேயே எதிர்பார்க்கப்பட்டது. அதே மாதிரி கிட்டத்தட்ட 75 கோடி வரைக்கும் வெளிநாடுகளில் வியாபாரம் ஆனது.
சலார்: கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான படம் சலார். பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் பெரிய அளவில் இந்த படம் எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தாலும் திரைக்கதை அந்த அளவுக்கு பூர்த்தி அடையாததால் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. விமர்சனங்களுக்கு நடுவே இந்த படம் கிட்டதட்ட 70 கோடி வரை வெளிநாடுகளில் வியாபாரம் ஆனது.