Dhanush : ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் என்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை காட்டிலும் ஓடிடி வெளியாகும் படங்களை தான் ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள். காரணம் அலைச்சல் இல்லாமல், கூட்ட நெரிசலும் இல்லாமல் வீட்டிலேயே ஒரு படத்தை பார்த்து விடலாம் என்பதுதான்.
இதனால் தான் படம் வெளியான ஒரு மாதத்திலேயே ஓடிடியிலும் வெளியிட்டு விடுகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் வெளியான படங்களில் முதல் ஐந்து இடத்தை பிடித்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான அதர்வாவின் டிஎன்ஏ படம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
மருத்துவத் துறையில் நடக்கும் குழந்தை மாற்றம் மற்றும் கடத்தல் ஆகியவற்றை வெளிக்கொண்டுவரும் படமாக எடுக்கப்பட்டிருந்தது. இது தியேட்டரிலேயே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. அடுத்ததாக நான்காவது இடத்தில் ஆப் ஜெய்சோ கொய் என்ற படம் உள்ளது.
கடந்த வாரம் ஓடிடியில் அதிக வியூஸ் பெற்ற ஐந்து படங்கள்
நெட்பிளிக்ஸில் வெளியான இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்ததாக மூன்றாவது இடத்தை ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான மலையாள படமான ரோந்த் என்ற படம் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை தான் தனுஷின் குபேரா படம் பிடித்திருக்கிறது.
இந்த படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஓடிடியிலும் அதிக பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது. குபேரா படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
முதல் இடத்தை பிரித்விராஜ் நடிப்பில் வெளியான சர்சமீன் படம் பெற்றுள்ளது. இந்த படம் ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.