Sivakarthikeyan : சூர்யா இன்று தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து சூர்யா சினிமாவில் மிகப்பெரிய சருக்களை சந்தித்து வருகிறார். இப்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கிறது கருப்பு படம். ஆர்ஜே பாலாஜி இந்த படத்தை இயக்கி உள்ள நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது.
மேலும் தன்னுடைய பிறந்தநாள் மட்டும் அல்லாமல் அடுத்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்று வழிபட்டு இருக்கிறார் சூர்யா. அதாவது பாரீஸ் பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சென்று இருக்கிறார்.
சூர்யாவுக்காக அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதேபோல் இன்று சிவகார்த்திகேயனும் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோயிலுக்கு சென்று இருக்கிறார். இப்போது பராசக்தி படபிடிப்பு அந்த பகுதியில் நடந்து வருவதால் அங்குள்ள கோயிலுக்கு சென்று இருக்கிறார்.
கோயிலுக்கு சென்று வழிபட்ட சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா
அவர் சாமி தரிசனம் செய்த நிலையில் பக்தர்கள் சிவகார்த்திகேயனை பார்த்து செல்பி எடுத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி மற்றும் மதராசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சென்றிருக்கிறார்.
அமரன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார். இதுபோன்று கோயிலுக்கு செலவழிப்பதற்கு பதிலாக வேறு ஏதாவது நன்மை செய்யலாம் என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
ஆனால் சூர்யா தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அதேபோல் சிவகார்த்திகேயனும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். கடவுள் நம்பிக்கை என்பது அவர்களது தனிப்பட்ட விருப்பம்.