எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். அடுத்த வருட 2026 பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இந்த படத்திற்கு KVN தயாரிப்பு நிறுவனம் கிட்டத்தட்ட 275 கோடி சம்பளமாக தளபதிக்கு வழங்கி உள்ளது. இயக்குனர் ஹச் வினோத்திற்கு 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பில் விஜய்-யின் நெருங்கிய நண்பர் ஜெகதீஷும் பார்ட்னர் தான். இப்படி சம்பளத்தை போட்டு அப்படி எடுத்துப்பாங்க போல, இது ஒரு புறம் இருக்கட்டும் தலைவர் ரஜினியின் கூலி படத்திற்கு கிட்டத்தட்ட 280 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
இது விஜய்யின் கடைசி படத்தின் சம்பளத்தை விட 5 கோடி அதிகமாம் , லோகேஷ் மேல் உள்ள நம்பிக்கையில் சன் பிக்சர்ஸ் தலைவர் ரஜினிக்கு வாரி வழங்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் ரிலீஸ்-க்கு முன்னரே கிட்டத்தட்ட 550 கோடி பிசினஸ் ஆகி உள்ளது கூலி.
விஜய் இனி நடிக்கப் போவதில்லை, அஜித் வருடத்திற்கு ஒரு படம் தான் நடிப்பேன் என்று கூறும் பட்சத்தில் 74 வயதிலும் கோலிவுட்டை தாங்கி பிடித்து வருகிறார் ரஜினி என்பதுதான் நிதர்சனமான உண்மை. எந்த ஒரு கட்டத்திலும் அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டு தான் வருகிறது.
தென்னிந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற சாதனையை தற்போது வரை தக்க வைத்துள்ளார். கண்டிப்பாக கூலி படம் 1000 கோடி வசூலை தாண்டும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினியுடன் நாகார்ஜுனா, உபேந்திரா, சோவின் சாஹிர், அமீர்கான், ஸ்ருதிஹாசன் என ஒரு பட்டாளமே நடித்துள்ளது.
இதைத் தாண்டி லோகேஷன் ஆணித்தனமான ஸ்கிரீன் ப்ளே, டயலாக் மீது ரஜினி மற்றும் மாறனுக்கு அதீத நம்பிக்கை இருக்கிறதாம். நேற்று அனிருத்-டி.ஆர் பாடிய பாடல் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலானது, நிஜமான ஒரு கூலி படத்தின் வைப் நம்மளால் பார்க்க முடிந்தது.