Vijay: பொது வாழ்க்கைக்கு என்று வந்து விட்டாலே பல சர்ச்சைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். அப்படித்தான் விஜய் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்ததில் இருந்தே அவருக்கு பிரச்சனையே வாழ்க்கை என்று ஆகிவிட்டது.
விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்தார். அதிலிருந்து இதுவரை அவர் சந்தித்த ஐந்து பெரும் பிரச்சனைகளை பற்றி பார்க்கலாம்.
விஜய் சந்தித்த 5 பெரும் சர்ச்சைகள்
இவர் விஜய் மீது முதலில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு சொந்த அப்பா அம்மாவையே கவனிக்காதவர். விஜய்க்கு அவருடைய அப்பா சந்திரசேகர் உடன் மனஸ்தாபம் இருந்த காலகட்டங்களை மீண்டும் ஞாபகப்படுத்தி, பெற்றோர்களையே பார்க்காத இவர் எப்படி நாட்டை பாதுகாக்க போகிறார் என கிளப்பி விடப்பட்டது. இதற்கு கட்சியின் கொள்கை மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய விழாவில் அப்பா அம்மாவை வரவைத்து பதிலடி கொடுத்தார்.
நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நெருங்கிய உறவில் இருப்பதாக செய்திகள் கசிய ஆரம்பித்தது. அவருடைய நண்பர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவின் வீட்டிற்கு அருகிலேயே கீர்த்தி சுரேஷ் குடியிருக்கிறார் என்றும் விஜய் அங்கே அடிக்கடி சென்று வருகிறார் என்றும் பேசப்பட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய பல வருட காதலன் ஆண்டனியின் திருமணத்திற்கு பிறகு தான் இந்த சர்ச்சை ஓய்ந்தது.
விஜய்யின் மீது அடுத்த சுமத்தப்பட்ட பெரிய சர்ச்சை விஜய் பாஜக அல்லது திமுகவின் B டீம். ஓட்டுக்களை பிரிப்பதற்காக காசு வாங்கிக்கொண்டு கட்சி ஆரம்பித்திருக்கிறார் என சொல்லப்பட்டது. தற்போது திமுக மற்றும் பாஜகவுடன் தனக்கு எந்த கூட்டணியும் கிடையாது என்பதை ஆணித்தரமாக சொல்லி இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டியிருக்கிறார் விஜய்.
விஜய் மற்றும் திரிஷா நெருங்கிய உறவில் இருப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வதந்தி வந்து மறைந்தது. தற்போது மீண்டும் அந்த விஷயத்தை உறுதியாக சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். நிறைய புகைப்படங்களை ஆதாரங்களாக காட்டியும் விஜய் த்ரிஷாவின் பிறந்தநாளில் கலந்து கொண்டதை எல்லாம் வைத்து தொடர்ந்து அழுத்தமாக இந்த விஷயம் பேசப்படுகிறது.
விஜய் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டார். பிள்ளைகளுடன் அவர் இல்லை. மனைவி மற்றும் பிள்ளைகளையே ஒழுங்காக வைத்து வாழத் தெரியாதவர் எப்படி தமிழக மக்களே காப்பாற்றப் போகிறார் என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
விஜய் தரப்பில் இருந்து இதற்கு எந்த ஒரு கண்டனமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து செய்யவில்லை என்பதை மறைமுகமாக அவருக்கு நெருக்கமானவர்கள் தங்களுடைய பேட்டிகளின் மூலம் சொல்லி வருகிறார்கள்.