எல்லா நடிகர்களுக்கும் ஒரு சென்டிமென்ட் உண்டு. ஒரு மாதிரி டைட்டாக போய்க் கொண்டிருக்கும் சினிமா கேரியருக்கு சின்னதாக ஒரு மாற்றம் கொடுப்பார்கள். ஒரிஜினாலிட்டியிலிருந்து வேறு விதமாய் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வித்தியாசம் காட்டுவார்கள்.
அப்படி பல நடிகர்கள் காமெடி கலந்த கேரக்டர் பண்ணுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த மாதிரியான நேரத்தில் அவர்கள் தேடப்படும் இயக்குனர் சுந்தர் சி. கார்த்திக், பிரசாந்த், சரத்குமார், விஷால் போன்ற நடிகர்கள் திடீரென காமெடி அவதாரம் எடுத்த பெருமை சுந்தர் சிக்கு உண்டு.
அப்படி ஒரு நடிகரை விட்டுக் கொடுக்காமல் சுந்தர் சி தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வந்தார். ஆனால் அதை எல்லாம் மதிக்காமல் மீண்டும் பிரச்சனையை சிக்கிக்கொண்டு தன் கேரியரை தொலைத்து விட்டார். இப்பொழுது மீண்டும் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி ஆர்வம் காட்டி வருகிறார்.
பட்டாம்பூச்சி, கலகலப்பு 2, காபி வித் காதல் போன்ற சுந்தர் சி படங்களில் தலை காட்டி வந்த நடிகர் ஜெய். 2023 வருடத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் தமிழ் படங்களில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஒரு காலத்தில் எல்லோரும் அறியப்படும் நடிகராக வலம் வந்த அவர், தன்னுடைய மோசமான ஆட்டிடியூடால் தேரியரை தொலைத்தார்.
இப்பொழுது அவர் நடித்து முடித்திருக்கும் படம் “சற்றென்று மாறுது வானிலை”.இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸிடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்த பாபு விஜய் இயக்கியுள்ளார். இதை பெரிதும் நம்பி இருக்கிறார் ஜெய். ஏனென்றால் இதற்கு முன் எங்கேயும் எப்போதும் படம் அவருக்கு ஹிட்டானது. அதையும் ஏ ஆர் முருகதாஸின் உதவி இயக்குனர் தான் இயக்கினாராம்.