Anushka: தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்து ரிஸ்க் எடுத்து, ஒரு கட்டத்தில் அது மக்களுக்கு பிடிக்காமல் போய் மார்க்கெட்டை இழந்து இருக்கிறார்கள்.
அப்படி புகழின் உச்சியில் இருக்கும் போது ஒரு படத்தின் கேரக்டரை நம்பி பெரிய ரிஸ்க் எடுத்து மார்க்கெட்டை இழந்த ஐந்து நடிகைகளை பற்றி பார்க்கலாம்.
அனுஷ்கா: நடிகை அனுஷ்கா லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்த காலகட்டத்தில் அவர் எடுத்த விபரீத முடிவு தான் இஞ்சி இடுப்பழகி திரைப்படம். யோகா ஆசிரியரான இவர் ஈசியாக எடையை குறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இந்த படத்திற்காக அதிக அளவு எடையை ஏற்றினார்.
படம் நினைத்த வெற்றியை பெறவில்லை. அத்தோடு அனுஷ்காவால் ஏற்றிய எடையை குறைக்கவே முடியவில்லை. இதனால் பாகுபலி இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா நடித்த காட்சிகளில் எல்லாம் டெக்னாலஜி முறைப்படி அவருடைய எடை குறைவாக இருக்கும் மாதிரி காட்டப்பட்டது.
சினேகா: நடிகை சினேகாவுக்கு மிகப்பெரிய பாசிடிவ் அவருடைய முகமும் அவர் ஏற்ற நடித்த குடும்பப் பாங்கான கேரக்டர்களும். புதுப்பேட்டை படத்தில் சினேகா தவறான தொழில் செய்து பின்னர் தனுஷை காதலிப்பது போன்ற கதை.
மேலும் நிறைய முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் இருந்தது. இதனால் பல வருடங்களுக்கு சினேகா பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துப் போனார்.
அமலா பால்: விவாகரத்திற்கு பிறகு அமலா பாலுக்கு விஐபி 2 மற்றும் அம்மா கணக்கு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்தன. தைரியமான ஹீரோயினாக காட்டிக் கொள்கிறேன் என்பதற்காக ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்த இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா டீசன்டாக அமலா பாலுக்கு குட்பை சொல்லிவிட்டது.
கீர்த்தி சுரேஷ்: தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் ஆக வலம் வந்து கொண்டிருந்தார் கீர்த்தி சுரேஷ். ரெமோ திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் உச்சம் தொட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் பென்குயின் திரைப்படத்திற்காக உடல் எடையை பல மடங்கு குறைத்தார் கீர்த்தி சுரேஷ். இதனால் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கண்ணில் லிஸ்டிலிருந்து உடனடியாக எலிமினேட் செய்யப்பட்டார்.
சிம்ரன்: இளம் ஹீரோயின்களின் வரவைத் தாண்டி சிம்ரன் தன் மார்க்கெட்டை ஓரளவுக்கு தாக்குப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த காலகட்டம். தனக்கு வாலி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த எஸ் ஜே சூர்யாவுக்காக நியூ படத்தில் நடித்தார். ஏற்கனவே மதில் மேல் பூனையாக இருந்த மார்க்கெட் இந்த படத்திற்குப் பிறகு மொத்தமாக சரிந்தது.