Arjun das : முதலில் கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரின் குரலுக்கு பல ரசிகர்கள் அடிமை என்று சொல்லலாம். யாருன்னு தெரியாமல் ஒரு காலத்தில் இருந்த அர்ஜுன் தாஸ் தற்போது பெண்களின் கனவு கண்ணனாக வலம் வருகிறார்.
தொடர் பயணம்..
மீண்டும் அநீதி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுத்தார். பின்பு ரசாவதி திரைப்படத்தில் தனது முழு நடிப்பையும் செலுத்தி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மேலும் தனக்கென ஒரு இமேஜை உருவாக்கிக் கொண்டார்.
வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது ஒரு பேட்டியில் முக்கிய பிரபலத்தை பற்றி பேசியிருப்பது வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பல நாளுக்குப் பிறகு அர்ஜுன் தாசின் இந்த பேட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
“லோகேஷ் கனகராஜ் எனக்கு கால் பண்ணுவார். தலைவன் கமல்ஹாசன் ஷூட்டிங் இறங்கிவிட்டார் வந்து பார் என்று கூப்பிடும் போது, நான் கமலின் நடிப்பை பார்ப்பதற்கே செல்வேன். அந்த அளவிற்கு நான் கமலின் ரசிகர் என்பதை பெருமையாக கூறுகிறேன்.
இந்தியன், அன்பே சிவம், குணா,, சத்தியா போன்ற அவரின் அனைத்து படங்களையும் நான் திரும்பி திரும்பி பார்ப்பேன்- அர்ஜுன் தாஸ்”. இப்படி அர்ஜுன் தாஸ் பேசியது கமல் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகத்தை கிளப்பியது என்றாலும் இன்னொரு பக்கம் யோசிக்க கூடிய விஷயமாக மாறியுள்ளது.
கொக்கி போடும் அர்ஜுன் தாஸ்..
இந்நிலையில் ஒரு பேச்சு வலைத்தளங்களில் அடிபட்டு வருகிறது. ” இப்படி கமலஹாசன் சாருக்கு ஐஸ் வைத்து கொக்கி போடுகிறாரா அர்ஜுன் தாஸ்” என்று பல கேள்விகள் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இவர் பேசிய இந்த வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங் லிஸ்டில் இருக்கிறது.