KamalHaasan : தமிழ் சினிமாவையே அதிர வைக்கும் கமல் ஹாசனின் நடிப்பு அனைத்து மக்களின் மனதிலும் பதிந்த ஒன்று. உலக நாயகன் பட்டத்தை வென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த நாயகன் கமல்ஹாசன்.
சிறுவயதிலேயே சினிமாவில் தனது திறமையை வெளிப்படுத்திய கமலஹாசன், 1996 இல் இந்தியன் திரைப்படத்தில் நடித்து அனைவரிடத்திலும் பயங்கரமான வரவேற்பு பெற்றார். கமல்ஹாசன் வாழ்க்கையில் இது சரித்திரத்தை எழுதிய படம் என்று சொல்லலாம்.
இந்தியன் : கமலஹாசன் இந்த திரைப்படத்தில் இரண்டு வேடமிட்டு நடித்திருப்பார் இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்தது “சுதந்திரப் போராளியான வயதான சேனாதிபதி ஊழலை எதிர்த்து போராடுவார். ஆனால் அவரது மகன் சந்திரபோஸ் நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வார்.
ஊழலுக்கு எதிராக போராடும் சேனாதிபதி தனது மகனை கூட விட்டு வைக்காமல் தண்டிக்க தயார் ஆவார்”. 1996 ஆம் ஆண்டுகளில் இந்த திரைப்படம் பயங்கரமான வெற்றியை கொடுத்தது.
கேள்விக்குறியான படம்..
2024-இல் கமல், சித்தார்த் இவர்களது நடிப்பில் இந்தியன் திரைப்படத்தின் பாகம்-2 வெளியானது. ஆனால் இயக்குனர் சங்கர் எதிர்பார்த்த மாதிரி வெற்றியை கொடுக்கவில்லை. இந்த திரைப்படத்தால் கமலஹாசன் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.
இந்தியன் படத்தின் பாகம்-3 விரைவில் திரைக்கு வரும் என ஒரு தகவல் பரவி வந்தது. இந்தியன்-2 பயங்கரமான அடி வாங்கியதால் நிச்சயம் பாகம்-3 வெளி வந்தால் 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியன் திரைப்படத்தின் பெயரே கெட்டுப் போகும் என்பது உறுதி தான். இந்நிலையில் இந்தியன்-3 இந்த ஆண்டு 2025க்குள் வெளியிடப்படும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.