தமிழ் சினிமா ரசிகர்கள் பல வருடங்களாக காத்திருக்கும் ஒன்று- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் multistarrer படம். 70, 80களில் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்தாலும், கடந்த 30 ஆண்டுகளாக screen share செய்யவில்லை. ரசிகர்களின் கனவு இன்னும் பூர்த்தி ஆகவில்லை. ஆனால் சமீபத்திய buzz படி, கமல்ஹாசன் தனது dream script-ஐ வைத்து இந்த ப்ராஜக்ட் நடக்க வேண்டும் என்றும், அதை லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார்.
கமல்ஹாசனின் தரப்பு – “இது என் கதை”
கமல்ஹாசன் தரப்பிலிருந்து வந்த தகவல்படி, இந்த multistarrer படம் கமலின் சொந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. அவர் இந்தக் கதையை நீண்டநாள் தயார் செய்து வருகிறார். இதை screen-ல் உயிர்ப்பிக்கக்கூடியவர் ஒருவரே – அவர் லோகேஷ் கனகராஜ் என்று கமல் நம்புகிறார்.
லோகேஷ் கனகராஜ் – ரசிகர் to டைரக்டர்
- லோகேஷ் பல interviews-ல் openly சொன்னவர்: அவர் சிறு வயதில் இருந்தே கமல்ஹாசன் ரசிகர்.
- விக்ரம் (2022) படம் தான் இதற்கு பெரிய உதாரணம். கமலின் comeback picture-ஆக அது pan-India hit ஆனது.
- Vikram success-க்கு பிறகு, கமல் – லோகேஷ் bond இன்னும் அதிகரித்தது.
கமலின் விருப்பம்: முழு கட்டுப்பாடு லோகேஷ்க்கு
கமல் கூறியிருப்பது: இந்த project pre-production, shoot, post-production எல்லாவற்றையும் லோகேஷ் கனகராஜ் personal supervision பண்ணுவார். Quality compromise இல்லாமல், international standard-ல் படம் உருவாகும். ரசிகர்கள் மட்டுமல்ல, உலகமே கொண்டாடும் multistarrer படமா இருக்கணுமாம்.

ஆனால் இறுதி முடிவு ரஜினி கையில்
இந்த பெரிய பட்ஜெட் படத்திற்கு green signal கொடுக்க வேண்டியது ரஜினிகாந்த் தான். என்னதான் ரஜினி, கமல் நண்பர்களாக இருந்தாலும் போட்டின்னு வந்துட்டா வெற்றிதான் நோக்கம். கமல் ரசிகர் லோகேஷ்ட படத்தை கொடுத்தா ரஜினி மாஸ் கம்மிதான் ஆகும் என நினைக்கிறார். ரஜினி scripts-ஐ தேர்ந்தெடுக்கும் போது ரசிகர்கள் + மாஸ் reach-ஐ அதிகமாக பார்க்கிறார். அவர் சமீபத்திய படமே ( Coolie, Jailer ) experimental choices எடுத்துள்ளார்.
சவால்கள் என்ன?
- இருவருக்கும் equal screen space கொடுப்பது.
- Story balance பண்ணுவது – mass + content.
- Budget management (expected 500 – 800 crore).
- Release timing (festival season targeting).
கமல் கதை ரஜினிக்கு சூட் ஆகுமா? ரசிகர்களுக்கு பிடிக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.