RJ Balaji : கருப்பு படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் ஒருபுறம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. இயக்குனர் அட்லீ தான் பல படங்களை காப்பி அடித்து படங்களை எடுத்து வருகிறார் என்ற விமர்சனம் வந்து கொண்டிருந்தது.
இப்போது அதே பாணியை ஆர் ஜே பாலாஜியும் கைப்பற்றி இருக்கிறாரா என்பது தான் டீசர் மூலம் ரசிகர்களை யோசிக்க வைக்கிறது. அதாவது இந்த படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பதால் அதில் ஜெய் பீம் படத்தின் சாயல் இருப்பதாக கூறப்படுகிறது.
வக்கீலாக இருக்கும் சூர்யா மற்றொருபுறம் கடவுள் மீது நம்பிக்கை வைத்து ருத்ர தாண்டவம் ஆடுகிறார். அந்த காட்சிகளைப் பார்க்கும்போது காந்தாரா படம் தான் நினைவுக்கு வருகிறது. மேலும் சில காட்சிகளில் சிகரெட் பிடிக்கும் சூர்யாவை பார்க்கும் போது விக்ரம் பட ரோலக்ஸ் தான் கண் முன் வருகிறது.
கருப்பு டீசரில் கவனிக்கப்பட்ட சில காட்சிகள்
கஜினி படத்தில் எப்படி அசினுடன் நின்று சூர்யா தர்பூசணி சாப்பிடுவாரோ அந்த காட்சியை அப்படியே கருப்பு படத்தில் ரீ கிரியேட் செய்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி. ஆகையால் படத்தில் சொந்தமாக எதுவுமே இயக்குனர் செய்யவில்லையா என்று ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சூர்யாவுக்கு கங்குவா மற்றும் ரெட்ரோ படங்கள் கை கொடுக்காமல் சென்ற நிலையில் கருப்பு படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் அவருடைய கருப்பு படத்தின் டீஸர் இவ்வாறு ட்ரோல் செய்யப்படுகிறது.
ஆகையால் டிரைலர் மற்றும் படம் வெளியானால் என்னென்ன அக்கப்போர் ஆகப் போகிறது என்று தெரியவில்லை. அட்லீ படங்களுக்கும் இதே போல் விமர்சனம் வந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அதேபோல் ஆர் ஜே பாலாஜி, சூர்யா கூட்டணி கல்லா கட்டுகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.