MK Muthu: கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் முக முத்து இன்று உயிரிழந்திருக்கிறார். இவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகன். இவர் 7 மாத கைக்குழந்தையாக இருக்கும் போது பத்மாவதி இறந்துவிட்டார்.
ஸ்டாலின், அழகிரி மாதிரி கலைஞரின் புகழ் வெளிச்சம் இவருக்கு இல்லாமல் போய்விட்டது என்பதை நிதர்சனமான உண்மை. ஆனால் இவர் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் செய்யாத அட்ராசிட்டிகள் கிடையாது. எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது எப்படியும் என்று யார் திமுகவிலிருந்து விலகி விடுவார் என்பது கருணாநிதிக்கு தெரிந்து விட்டது.
தந்தைக்கு எதிராக பிரசாரம் செய்த முக முத்து
எம்ஜிஆர் சினிமா மூலம் தான் திமுக கட்சி அதிகம் வளர்ந்தது. அவர் வெளியேறிவிட்டால் அந்த இடத்தில் யார் இருப்பார் என்ற யோசனை. தன்னுடைய மகன் முத்துவை அந்த இடத்தில் களம் இறக்கினார். அச்சு அசல் எம்ஜிஆர் போலவே இருக்கும் இவர் பெற்றால் தான் பிள்ளையா, பூக்காரி போன்ற ஒரு சில படங்களில் நடித்தார்.
எம்ஜிஆர் போல் இருக்கும் இவர் எம்ஜிஆரின் நடிப்பை அப்படியே காப்பி அடித்ததால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. ஒரு கட்டத்தில் மதுவுக்கு அடிமையான இவரால் கருணாநிதிக்கு பெரிய அளவில் மனக்கசப்பு ஏற்பட்டது.
திமுகவின் பரம எதிரியான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து 5 லட்சம் நிதி உதவி பெற்று வந்ததன் மூலம் கருணாநிதி இவர் மீது பாராமுகமாய் இருந்தார். போதாத குறைக்கு கோபாலபுரத்தில் கலைஞரின் வீட்டுக்கு அருகிலேயே வீடு வாடகைக்கு எடுத்து, அதிமுகவில் சேர்ந்து கருணாநிதிக்கு எதிராகவே பிரச்சாரம் செய்த கில்லி இவர்.
கலைஞர் கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி முத்துவை கோபாலபுரத்தை விட்டு வெளியேற்றினார். அதன் பின்னர் ஈஞ்சம்பாக்கத்தில் குடியேறிய முத்து ரொம்ப நலிவுற்றபோது கலைஞரை நேரில் அழைத்து அவருக்கு ஆதரவு கொடுத்தார். என்னதான் மாற்றான் தாய் பிள்ளைகளாக இருந்தாலும் தயாளு அம்மாள் வாரிசுகள் மீது முத்துவுக்கு அளவு கடந்த பாசம் இருந்தது.