Keerthi Suresh : கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில் சமீபகாலமாக அவருடைய படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பேபி ஜான், ரகு தாத்தா போன்ற படங்கள் நடுத்தரமான வெற்றியை கொடுத்தது.
கல்யாணத்திற்கு பிறகு செம பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ஏழு படங்கள் இருக்கிறது. அந்த வகையில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி அமேசான் பிரைமில் உப்பு கப்புரம்பு படம் வெளியாக இருக்கிறது.
மிகவும் நகைச்சுவை கலந்த கதைகளத்தில் உருவான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஜேகே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ரிவால்வர் ரீட்டா படம் ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் கைவசம் இருக்கும் 7 படங்கள்
தெலுங்கில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ரவுடி ஜனார்த்ன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் கடந்த ஜூன் மாதம் பாலிவுட்டில் ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வியாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் திரில்லர் படமாக உருவாகி வரும் அக்கா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
கணேஷ் ராஜ் இயக்கத்தில் விஜே ரக்சன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் கன்னிவெடி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.