Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் கழுத்தில் சுயம்புலிங்கம் கிட்டத்தட்ட தாலி கட்டும் நேரத்தில் அன்பு அந்த இடத்திற்கு வந்து தடுத்து விடுகிறான்.
கோகிலா மற்றும் ஆனந்தியை கல்யாண மண்டபத்திற்கு திருப்பி கூட்டிட்டு வரும்போதுதான் அன்புவின் அம்மா மிகப்பெரிய பஞ்சாயத்தை பண்ண இருக்கிறார். கோகிலாவை சுயம்புலிங்கம் கடத்தியதை ஆனந்தி யாரிடம் சொல்லாமல் தனியாக அந்த இடத்திற்கு போனாள்.
அதே மாதிரி அன்பும் யாருக்கும் தெரியாமல் அந்த இடத்திற்கு போய் இருவரையும் காப்பாற்றி கூட்டிக் கொண்டு வருகிறான். இவர்கள் மண்டபத்தை நெருங்குவதற்குள் பொழுது விடிய ஆரம்பித்து விடுகிறது.
இதனால் கல்யாணத்துக்கு தயாராக ஆனந்தியின் அம்மா ரூமுக்கு வந்து கோகிலா மற்றும் ஆனந்தியை எழுப்ப வருகிறார். அப்போது ரெஜினா மற்றும் சௌந்தர்யா தான் ரூமுக்குள் இருக்கிறார்கள். ஒரு பக்கம் ஆனந்தியும் கோகிலாவும் எங்கே என்று ஆனந்தியின் அம்மா கேட்க ஆரம்பிக்கிறார்.
இன்னொரு பக்கம் அன்பு கல்யாண மண்டபத்தில் இல்லை எங்கே போனான் என லலிதா கேட்கிறார். ஆனந்தி மண்டபத்தில் இல்லை என்றதும் அன்பு அவளை தனியாக அழைத்துச் சென்று தாலி கட்டி இருப்பானோ என்ற சந்தேகம் அன்புவின் அம்மாவிற்கு வருகிறது.
கண்டிப்பாக நடந்த எல்லாவற்றையும் ஆனந்தியின் அப்பா அம்மா முன்னிலையில் லலிதா சொல்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை விஷயத்தை தெரிந்து கொண்ட அழகப்பன் ஒரே மேடையில் சரவணன் – கோகிலா அன்பு – ஆனந்தி திருமணத்தை செய்து வைக்கிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.