சிவகார்த்திகேயன் லைன் அப்பில் அடுத்து வெங்கட் பிரபு தான் இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது அது கோவிந்தாவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலிருந்தே சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகும் பொழுது ஏதாவது பிரச்சனை வந்து தடையாய் நிற்கும்.
பல பிரச்சனைகளை சமாளித்து வெளிவந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது புது பிரச்சனை ஒன்றில் மாட்டிக் கொண்டார். மதராசி, பராசக்தி படங்களை முடித்த பிறகு வெங்கட் பிரபுவின் படத்தை ஆரம்பிக்கலாம் என திட்டம் போட்டிருந்தார்.
இப்பொழுது பழைய பிரச்சனை ஒன்று சிவகார்த்திகேயனை துரத்தி வருகிறது. அயலான் பல ரிலீஸ் நேரத்தில் வந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு சிவகார்த்திகேயன் 20 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனுக்காக ஒரு படத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
பேஷன் ஸ்டுடியோ சுதன் மற்றும் கோல்ட்மைன் மனிஷ் இருவரும் சேர்ந்து அந்த 20 கோடி ரூபாய் கடனுக்காக சிவகார்த்திகேயனிடம் கால் சீட் வாங்கியுள்ளனர். அந்த ஒப்பந்தத்தின்படி 13 மாதங்களில் இவர்களுக்கு ஒரு படம் பண்ணிக் கொடுப்பதாக நிறைவேற்றப்பட்டது. இந்த படத்தின் இயக்குனராக சிபி சக்கரவர்த்தியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆனால் இன்று வரை 18 மாதங்கள் முடிந்தும் கூட இன்னும் படம் ஆரம்பித்த பாடில்லை. இதனிடையே சிபி சக்கரவர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிவகார்த்திகேயன் ஒதுங்கி விட்டார். இப்பொழுது வெங்கட் பிரபு படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் மனிஷ் மற்றும் சுதன் போர்க்கொடி தூக்குகிறார்கள்.
வெங்கட் பிரபு படம் இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. சிபி சக்கரவர்த்தியை ஒதுக்கிய சிவகார்த்திகேயன் இப்பொழுது மீண்டும் அவருடன் இணைந்து பணிபுரிய வேண்டியதாக உள்ளது. இப்படி விடாமல் கர்மா சுழன்று அடிக்கிறது.