Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் உச்சத்தில் இருக்க கூடிய ஒரு நடிகர். இன்றளவில் இவரது பேரும் புகழும் இம்மியளவும் கூட குறையவில்லை. ரஜினிகாந்த் அவர்களுக்கும் ரசிகர் பட்டாளம் குறைந்ததாக தெரியவில்லை.
இடையில் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறி எந்த அப்டேட் கொடுக்காமல் மௌனமாக இருந்து வந்தார். அப்போது ரஜினிகாந்த் அவர்கள் நிச்சயமாக அரசியலுக்கு வரப்போகிறார் என்று வெளிவட்டாரங்கள் பேசிக்கொண்டிருந்தன.
இவ்வாறு அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடிரென்று ரஜினிகாந்த அவர்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறிவிட்டார். இது இவர்களின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.
இவ்வாறு அதனுடன் சினிமாவில் மட்டுமே நடித்து கொண்டிருந்த ரஜினிகாந்த் அரசியல் பக்கமே திரும்ப வரவில்லை. ஆனால் திடிரென்று ரஜினிகாந்த் அவர்களின் சகோதரர் சத்ய நாராயணன் அளித்திருந்த பேட்டி ஒன்றில் சர்ச்சையை கிளப்பும் விதமாக ஒரு தகவலை கொடுத்துள்ளார்.
அதாவது ரஜினிகாந்த் சகோதரரிடம் பத்திரியாளர்கள் ரஜினிகாந்த அவர்கள் MP ஆவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வி கேட்டுள்ளார்கள். அதற்கு அவர் அளித்த பதில் சர்ச்சையை கிளப்பும் விதமாக உள்ளது.
கவர்னர் பதவியையே உதறி தள்ளிய சூப்பர் ஸ்டார்..
அதாவது MP பதவியெல்லாம் ரஜினிகாந்துக்கு தேவையில்லை என்று கூறிவிட்டார். ஆனால் அதற்கு அடுத்ததாக இவர் கூறிருப்பது ரஜினிகாந்த் அவர்களுக்கு கவர்னர் ஆவதற்கு வாய்ப்பு வந்ததாகவும் அதை ரஜினிகாந்த் அவர்கள் மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார் ரஜினிகாந்தின் சகோதரர் .
இவர் கூறிருப்பது தற்போது அரசியல் வாட்டர்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒருவேளை இருக்குமோ என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. ஒருபக்கம் இப்படிலாம் உருட்டாதீங்க என்று நக்கலாக பேசிகொள்கிறார்களாம்.
இதற்கு ஏதும் பதில் தெரிவிப்பார் ரஜினிகாந்த் அவர்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுகிறதாம். இல்லை வழக்கம் போல மௌனமாக இருக்கப்போகிறாரா என்பதும் தெரியவில்லையாம்.