கவின் பல அட்ராசிட்டிகள் பண்ணினாலும் கைவசம் 4 முதல் 5 படங்கள் வைத்துக் கொண்டுதான் சுற்றி வருகிறார். இவர் மீது சூட்டிங் ஒழுங்காக வர மறுக்கிறாராம், படப்பிடிப்பு இரண்டாவது தளத்தில் நடந்தால் கூட லிப்ட் வேணும் என அட்ராசிட்டி பண்ணுகிறாராம். படத்தில் நிறைய தலையிடுகிறார் என்றெல்லாம் கவின் மீது ஏகப்பட்ட புகார் மனுக்கள்.
இயக்குனர் வெற்றிமாறன் இவரை வைத்து முதன் முதலாக மாஸ்க் என்ற படத்தை தயாரித்து வருகிறார். அந்தப் படத்திலும், கவின் ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்து வருகிறாராம். பெரிய மேதாவி நடிகர் போல் அதை மாற்றுங்கள் இதை மாற்றுங்கள் என கதையிலும் குறிக்கீடு செய்கிறாராம்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் இப்பொழுது கவினை மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ஹாய் என்ற ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார், இந்த படத்தை விக்னேஷ் சிவனின் அசிஸ்டன்ட் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் விஷ்ணு இடவன் இயக்கி வருகிறார்.
மேலும் ஹாய் படத்தின் சூட்டிங் 12 நாட்கள் நடைபெற்று உள்ளது. இருந்தாலும் அதில் ஒரு பிடிப்பு கிடைக்காமல் லலித், விக்னேஷ் சிவனிடம் முதலில் LIK படத்தை முடித்த பிறகு இந்த படத்தை பார்த்துக் கொள்ளலாம் என நிறுத்தி விட்டாராம். விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்காவிட்டாலும் லலித் இதை கிடப்பில் போட்டுவிட்டார்.
ஏற்கனவே LIK(லவ் இன்சூரன்ஸ் கம்பெனி )படம் ஆரம்பித்ததில் இருந்தே லலித் மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஏக பொருத்தமாய் இருக்கிறது. படத்தை நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார் பட்ஜெட்டையும் அதிகமாக மாற்றுகிறார் என லலித் சண்டையிட்டு வந்தார்.