Kaali Venkat: வாய்ப்பு கிடைக்கிறதே என எல்லாத்தையும் ஏற்கும் சிலர் இருப்பார்கள். ஆனால் அவையெல்லாம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களாக நிச்சயம் இருக்காது. ஆனால் முடிந்தவரை பணம் சம்பாதிக்க இந்த ரூட்டில் சில நடிகர்கள் செல்வதுண்டு.
ஆனால் இதுபோல் ஆடியன்ஸை வெறுப்பேத்தாமல் தனக்கான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களில் காளி வெங்கட் ஒருவர். கடந்த 15 வருடங்களாக இவர் நடித்து வருகிறார். அதில் இவருடைய பெயர் சொல்லும் படியான ஐந்து படங்களை பார்ப்போம்.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த முண்டாசுப்பட்டி படத்தில் இவருடைய நகைச்சுவை பெரிதும் கவனிக்கப்பட்டது. சாய் பல்லவி நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த கார்கி படத்தில் காளி வெங்கட் வழக்கறிஞராக நடித்திருப்பார்.
காளி வெங்கட்டின் சிறந்த 5 படங்கள்
அதில் அவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. அது மட்டும் இன்றி அப்படத்திற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் ஃபிலிம் ஃபேர் விகடன் என பல விருதுகள் அவருக்கு கிடைத்தது.
அதை அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் குமாஸ்தா கனகசபை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதுவும் ஆடியன்ஸ் மத்தியில் கவனம் பெற்றது. 2024ல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த குரங்கு பெடல் படத்தில் இவர் ஒரு குடும்பத் தலைவனாக நடித்திருப்பார்.
சைக்கிள் ஓட்ட ஆசைப்படும் மகனுக்கு இவர் எதிர்ப்பு சொல்வார். ஆனால் அதை தாண்டி சிறுவன் எடுக்கும் முயற்சி தான் படத்தின் கதை. இதில் காளி வெங்கட் சைக்கிள் ஓட்ட தெரியாதவராக நடித்திருப்பார்.
அடுத்து கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற லப்பர் பந்து படத்திலும் இவருடைய கதாபாத்திரம் கவனம் பெற்றது. இது மட்டும் இன்றி உறுமீன், கட்டா குஸ்தி, இந்தியா பாகிஸ்தான், மெட்ராஸ் மேட்னி என பல படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
இப்படியாக 15 வருட திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே நினைவில் நிற்கக் கூடியது. அது மட்டும் இன்றி தற்போது கதையின் நாயகனாகவும் இவர் நடிக்க தொடங்கியுள்ளார்.