இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செட் முற்றிலும் மாற்றப்பட்டு கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டது. “எங்க வீட்டு கல்யாணம்” என்ற சிறப்பு சுற்றில் கோமாளிகளும், குக்குகளும் கல்யாண விசேஷத்தில் பங்கேற்றது போல சுவாரசியமான அனுபவத்தை வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியல் வைஷாலி கலந்து கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து, முதல் சீசன் போட்டியாளர் ரம்யா பாண்டியன் தனது கணவர் லெவல் தவான் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளர்களுக்கு surprise கொடுத்தார். கல்யாண சூழ்நிலைக்கு இதை விட சிறந்த வரவேற்பு வேண்டுமா!
குக்குகள் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களுக்கு மாலையிட்டு தேர்வு செய்து இந்த வாரம் PAIRING நடந்தது. அதிரடி நுழைவில் கோமாளிகள் சினிமா ஹீரோக்களாக மாறியதும் ரசிக்கும்படி இருந்தது.
இந்த வாரம் ADVANTAGE டாஸ்க்கில் சமைக்க தேவை இல்லை பாடலுக்கு நடனமாடுவது மட்டும் தான். இதனால் இந்த டாஸ்க் கோமாளிகளுக்கும் குக்குகளுக்கும் எந்த ஒரு டென்ஷன் இல்லாமல் புத்துணர்வை ஏற்படுத்தியது. இந்த சுற்றில் ராஜு-ராமர், மதுமிதா-குரேஷி ஜோடிகள் வென்றனர்.
இவர்கள் வென்றதால், பிற போட்டியாளர்களிடம் இருந்து சாப்பாட்டு பொருட்கள் அல்லது வெட்டிய காய்கறிகளை எடுத்துக்கொள்ளும் சலுகை வழங்கப்பட்டது. பின் நிகழ்ச்சிக்கு பன் பட்டர் ஜாம் படக் குழுவும் புரமோஷனுக்காக வந்தார்கள். அந்த படத்தின் ஹீரோ என்பது நம்ம குக் வித் கோமாளி ராஜு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
CHEF OF THE WEEK வின்னர்
முக்கிய சுற்றில் 2 மணி நேரத்தில் எந்த ஒரு மாநிலத்தின் உணவையும் சமைக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருந்தது. எல்லோரும் நேரத்தை பின்பற்றி பரபரப்பாக சமைத்தார்கள். இந்நிலையில் குக்கு வித் கோமாளி ஹிஸ்ட்ரியில் இதுவரை நடக்காத ஒன்று நடந்தது.
அது என்னவென்றால் இன்று எக்ஸ்ட்ரா டைம் யாருக்கும் கிடையாது என்று கியாஸ் லைன் cut செய்யப்பட்டது. இது போட்டியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் இதுவரை CHEF OF THE WEEK பெறாத ஷபானா தான் இந்த வாரம் CHEF OF THE WEEK பட்டத்தை தட்டிச்சென்றார். இந்த வாரம் non competitive ரவுண்டு என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.