விஜய் டிவியின் பிரபலமான நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” யில் சென்ற வாரம் “பேமிலி ரவுண்ட்” நடைபெற்ற நிலையில்
இந்த வாரம் “Street food” ரவுண்ட் நடந்தது. அதே சமயம் டாப் 8 போட்டியாளர்களுக்கு இடையே competitive ரவுண்டு ம் நடந்தது. சமையல் மட்டுமல்லாமல், கலாட்டா, சிரிப்பு, எதிர்பாராத நிகழ்வுகள் எல்லாம் நடந்தது.
இந்த வாரத்தின் சிறப்பு விஷயம் என்னவென்றால், Cook மற்றும் Comali ஜோடிகள் வெவ்வேறாக உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலில் cooks-ஐ அழைத்து, உணவுப் பட்டியலிலிருந்து அவர்களின் விருப்பமான உணவுகளை தேர்வு செய்ய சொல்லப்படுகின்றது. அதற்குப் பிறகு கோமாளி களையும் அழைத்து, அதே பட்டியலில் இருந்து உணவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரே உணவை இருவரும் தேர்வு செய்தால், அவர்கள் ஜோடியாக அறிவிக்கப்படுகிறார்கள் .
மேலும் கோமாளிகள் அனைவரும் வெவ்வேறு வியாபாரி வேடங்களில் மேடையில் நுழைந்தனர். சிலர் காய்கறி வியாபாரி, சிலர் சேலை வியாபாரி, சிலர் டீ கடை வியாபாரி வேடங்களில் வந்தனர். இது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.
இந்த வார Advantage Task என்பது Pani Puri சாப்பிடும் போட்டி.
ஆனால் இந்த முறையில் ரக்ஷன் கூறும் திருப்பம் என்னவென்றால், Pani Puri-ஐ கோமாளிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். அவர்கள் 10 நிமிடங்களில் அதிகபட்சமாக எத்தனை பானி பூரி சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
ராமர் – 17, சாஞ்சித் – 22, சரத் – 29, புகழ் – 38, சௌந்தர்யா – 47, சுனிதா – 48
குரேஷி – 69, தங்கதுரை – 88 பானிபூரி சாப்பிட்டனர்.
இந்த வார Advantage Task-ல் வெற்றி பெற்ற Top 2 போட்டியாளர்கள் – உமர் மற்றும் தங்கதுரை அண்ட் பிரியா ராமன் மற்றும் குரேஷி, இந்த இரண்டு ஜோடிகளும் முக்கிய Cook-Off சுற்றில் Advantage சலுகை பெற்றுள்ளார்கள்.
இனிவரும் எபிசோட் இல் chef of the week அண்ட் Danger Zone யார் போகிறார்கள் என பார்க்கலாம்.