Gossip: நம்ம எல்லாம் சாதாரண மனுஷங்க கிடையாது என்ற நினைப்பில் தான் அந்த நடிகை சமீப காலமாக இருக்கிறார். யாரோ அவருடைய ஆழ் மனதில் இப்படி பதிய வைத்து விட்டார்கள் போல.
அவருடைய நடவடிக்கை எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. அதனாலேயே சோசியல் மீடியாவில் இவர் அதிகம் கலாய்க்கப்பட்டு வருகிறார். ஆனாலும் இவர் தன்னுடைய இணைய கூலிப்படை மூலம் தன்னைத்தானே பெருமைபடுத்தி சில பல வேலைகளை பார்க்கிறார்.
ஆனால் எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை. அதேபோல் அந்த மூன்றெழுத்து நடிகர் மீது தனக்கு இருக்கும் வன்மத்தை வெளிப்படையாக காட்டினார். இதனால் தனக்கு ஆதரவு கிடைக்கும் என நினைத்தார். ஆனால் அதுவும் காத்து போன பலூனாக போனது.
மன உளைச்சலில் தவிக்கும் நடிகை
இருந்தாலும் நடிகரை குறி வைத்து இவர் தொடர்ந்து ஏதேதோ செய்து வருகிறார். அத்தனையும் இவருக்கே ஆப்பாக முடிகிறது. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் ஒரு நடிகர் கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
அதில் இந்த நடிகைக்கு கூட தொடர்பு இருக்கும். சாக்லேட் பாய் நடிகருடன் சேர்ந்து இவர் அண்டர் கிரவுண்ட் பிசினஸ் செய்கிறார் என்றெல்லாம் கிசுகிசு பரவி வருகிறது. இப்படி சுற்றி சுற்றி வரும் பிரச்சனைகளால் நடிகை நிம்மதி இல்லாமல் தவிக்கிறாராம்.
அதேபோல் சமீப காலமாக இவர் கோவில் குளம் என சென்று வருகிறார். அதற்கு காரணம் குடும்ப வாழ்க்கை சண்டையும் சச்சரவுமாக இருக்கிறதாம். பேசாமல் அதிலிருந்து விலகிவிடலாம் என்று கூட நடிகை யோசிக்கிறாராம்.
இப்படி ஒரு தகவல் பரவி வரும் நிலையில் நடிகை அப்படி எல்லாம் செய்ய மாட்டார் என்கின்றனர். ஆனால் அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்.