தயாரிப்பாளர்கள் மத்தியில் மினிமம் கேரன்டி நடிகர் என பெயரெடுத்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் குட் நைட் மணிகண்டன். பல திறமைகளை கைவசம் வைத்திருக்கும் மணிகண்டன் அடுத்தடுத்து பிசியாக பல பெரிய இயக்குனர்கள் படங்களில் கமிட்டாகி உள்ளார்.
நடிப்பு, வசனகர்த்தா, டப்பிங் ஆர்டிஸ்ட் என ஏகப்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்கக்கூடிய மல்டி டேலெண்டெட் ஆர்டிஸ்ட் மணிகண்டன். ஒரு பக்கம் ஹீரோவாக நடித்து வந்தாலும், மறைந்த முன்னாள் நடிகர்களுக்கு டப்பிங் பேசி வருகிறார்.
சமீபத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் சினிமாவில் தோன்றும் மறைந்த நடிகர்களுக்கு இவர் தான் டப்பிங் பேசி வருகிறார். விஜய் நடிப்பில் உருவான கோட் படத்தில் ஏ ஐ மூலம் திரையில் தோன்றிய விஜயகாந்துக்கு இவர் தான் வாய்ஸ் கொடுத்துள்ளார்.
இப்படி ஹீரோவா நடிக்காவிட்டாலும் டப்பிங் மற்றும் வசனம் எழுதியே தன்னை பிசியாக வைத்துக் கொள்வார். மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்திற்கு இவர் தான் வசனம் எழுதியுள்ளார் அதற்காக அவார்டும் வாங்கி இருக்கிறார். கடைசியாக மணிகண்டன் நடித்தது குடும்பஸ்தன் திரைப்படம்.
இப்பொழுது பா ரஞ்சித்திடம் பணியாற்றி வரும் அசிஸ்டன்ட் இயக்குனர் குமார் என்பவர் மணிகண்டனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மக்கள் காவலன் என பெயர் வைத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் அவருக்கே தன்னுடைய அடுத்த படத்திற்கும் கால்ஷீட் கொடுத்து கொடுத்திருக்கிறார். புதிதாய் ஜெயம் ரவி தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார் அதிலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் மணிகண்டன்.