Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரனின் தாய்மாமா அருள் வாக்கு சொல்வதற்காக வீட்டிற்கு வந்தார். வந்ததும் வழக்கம் போல் குணசேகரனின் வாரிசுக்கு கல்யாணம் நிச்சயம் நடக்கும். ஆனால் அதில் நீங்கள் எதிர்பார்த்தபடி தான் நடக்கும் என்று நினைக்காதீங்க. அதே நேரத்தில் ஒரு உயிர் பலியும் இந்த வீட்டில் போகப்போகிறது என்று சொல்லி இருந்தார்.
இதனால் ஈஸ்வரி எடுத்த முடிவு என்னவென்றால் எப்படியும் தர்ஷன் கல்யாணம் நடப்பது உறுதி ஆகிவிட்டது என்றால் அது அன்புக்கரசியாக இருக்கக் கூடாது. அதனால் தர்ஷன் மற்றும் பார்கவிக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பதற்கு நான் தயாராகி விட்டேன் என்று ஈஸ்வரி, ரேணுகா நந்தினி ஜனனி இடம் சொல்கிறார். உடனே இது சம்பந்தமாக ஜீவானந்தம் முன்னாடி பேசி பார்க்கவே சம்மதிக்க வைக்க வேண்டும் என்று வெளியே கூட்டிட்டு போகிறார்கள்.
அதன்படி ஜீவானந்தமும் வந்துவிடுகிறார், இந்த கல்யாணத்தை பற்றி பார்கவி கேட்டதும் எனக்கு கல்யாணமும் வேண்டாம். என்னை இப்படியே இருக்க விட்டுருங்க, என்று கெஞ்சுகிறார். ஆனால் ஜீவானந்தம் ஈஸ்வரி சமாதானம் செய்து நிச்சயம் தர்ஷனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்கு சம்மதத்தை வாங்கி விடுவார்.
அந்த வகையில் முதல்முறையாக ஈஸ்வரி எடுக்க போகும் முயற்சியில் ஜெயித்துக் காட்டுவது போல் தர்ஷன் மற்றும் பார்க்க விக்கி கல்யாணம் நடந்துவிடும். அதே நேரத்தில் தாய்மாமன் சொன்ன அருள் வாக்கு இப்படி யாருடைய உயிர் போகப்போவது என்று கேள்விக்குறியாக இருக்கிறது. அதனால் ஜெயிலில் இருக்கும் ஞானத்தின் உயிருக்கு அறிவு மூலம் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.