Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி தனக்குத்தானே தாலி கட்டிக் கொண்டு குமரவேலுடன் இருந்ததால் எங்கே இப்படியே இவர்களுடைய வாழ்க்கையை முடித்துவிட்டு ஒன்று சேர்த்து வைக்கும் அளவிற்கு கதை இருந்தது. ஆனால் திடீரென்று இயக்குனர் கதையை மாற்றியதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்த ஒரு பெண்ணின் கல்யாணம் டார்ச்சரால் எடுத்த விபரீதம் தான்.
இந்த விஷயத்தை மக்களுக்கு ஒரு கருத்தாக சீரியல் மூலம் சொல்ல வேண்டும் என்று இயக்குனர் கதையை மாற்றி இருக்கிறார். அதனால் தான் பிடிக்காத திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, யாரு டார்ச்சர் கொடுத்தாலும் சரி அதை உடனடியாக பெற்றோர்களிடம் தெரிவித்து அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி அரசின் ரகசிய திருமணம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரியப்படுத்தினார்கள்.
அதோடு விடாமல் அட்டூழியம் பண்ணிய குமரவேலுக்கு சரியான தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று சட்டரீதியாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில் போலீஸ் சக்திவேல் வீட்டிற்கு சென்று குமரவேலுவை கையும் களவுமாக பிடித்து அரஸ் பண்ணி கூட்டிட்டு போய்விட்டார்கள். இதை பார்த்த சக்திவேல் கதி கலங்கி போய் நிற்கிறார்.
அந்த வகையில் பாண்டியன் எடுத்த துணிச்சலான முடிவுக்கு பின்னாடி எல்லா பெற்றோர்களும் இந்த மாதிரி மகளின் வாழ்க்கை சரி செய்யும் விதமாக துணிச்சலுடன் போராட வேண்டும் என்பதற்கு உதாரணமாக கதை இருக்கிறது. மற்றவர்கள் என்ன நினைப்பாங்க, மகளின் வாழ்க்கை பறிபோய் விடுமோ என்று பயத்தினால் அமைதியாக அடங்கிப் போய் இருந்தால் இழப்பு பெரிசாக மாறிவிடும்.
அதற்கு மகளின் வாழ்க்கையை காப்பாற்றும் விதமாக களத்தில் இறங்கினால் நிச்சயம் விமோசனம் பிறக்கும் என்று சொல்லும் விதமாக பாண்டியன் அதிரடியாக களத்தில் இறங்கி விட்டார்.