குஸ்புவே சும்மா இருக்காங்க! மீனாவால் ஒரு பயனும் இல்லை.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம் – Cinemapettai

Tamil Cinema News

Meena : நடிகை மீனா அவர்கள் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வளம் வந்து தற்போது தொடர்ந்து திரையுலகில் தன் திறமையால் பெரிய இடத்தை தக்க வைத்துள்ளார் என்பது அசைக்க முடியாத உண்மை. நடிகை மீனாவிற்கு மாபெரும் ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

நடிப்புத்திறமையால் மட்டுமல்லாமல் நடனத்திலும் மீனா அவர்கள் பேர்போனவர் என்பது அனைவரும் அறிந்ததே. முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் இவர் நடித்துள்ளார். மீனா நடித்த பெரும்பாலான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்த படங்கள்.

தமிழ் திரையுலகிற்கு வருபவர்கள் சிறிது காலத்திற்க்கு பிறகு அரசியலுக்கு வருவதென்பது தற்போது சாதாரணமான ஒரு விஷயம். அந்த வகையில் தற்போது மீனா அவர்கள் பாஜக-வில் இணையப்போகிறார் என்ற தகவல் வெளியாகி அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மீனாவால் ஒரு வாக்கு கூட பாஜக- விற்கு கிடைக்கப்போவதில்லை..

தற்போது மீனா அவர்கள் ஒரு மார்க்கெட் இழந்த ஒரு நடிகை. அவர் துணை ஜனாதிபதி அவர்களை சந்தித்து போட்டோ எடுத்து போட்டுள்ளார். இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இவர் பாஜக-வில் ஐக்கியமாக போகிறார் என இதன் மூலம் நமக்கு தெரிகிறது.

மீனா ஒரு நடிகை என்பதை தாண்டி அவரது வட்டம் என்பது நடிகை குஷ்பு, கலா மாஸ்டர் இவர்களை சுற்றி உள்ளது. இவர்கள் இரண்டு பேரும் பாஜக-வில் உள்ளனர்.அதனால் நடிகை மீனாவையும் பாஜக-வில் இணைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.

ஏற்கனவே நமீதாவை அவரது கட்சியில் சேர்த்துள்ளனர். ஏற்கனவே கட்சியில் இருக்கும் நடிகை குஸ்பு அவர்களே கட்சியில் சும்மாத்தான் இருக்கிறார், தற்போது சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகை மீனா அவர்களை பாஜக-வில் இணைப்பதன் மூலம் பாஜக-விற்கு ஒரு பயனும் இல்லை என வலைப்பேச்சு பிஸ்மி அவர்கள் அவரது நேர்காணலில் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.