Vijay : சினிமாவில் சாதித்த பயங்கரமான பேரும் புகழும் கொண்டவர் விஜய். இன்று அரசியலில் சாதிப்பாரா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது.
விஜய்க்கு ஆதரவளித்தவர்கள்..
சினிமா உலகை விட்டு மறைந்த மனோபாலா தனது கடைசி பேட்டியில் விஜயின் சமூக சேவைகளை சுட்டிக்காட்டி புகழ்ந்தார். இவரைப் போன்றவர்கள் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும் என்பதையும் கூறினார்.
விஜய் உடன் பல படங்களில் நடித்தவர் யோகி பாபு. தளபதி விஜய்க்கு எப்போதும் என்னுடைய ஆதரவு கிடைக்கும். அரசியலுக்கு அவர் வந்தால் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று விஜய்க்கு ஆதரவாக பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து நக்கீரன், குணா நந்தா, துணை நடிகர் சரவணன் போன்ற பல நடிகர்கள் விஜய்க்கு துணையாக ஆதரவளித்து பேசி உள்ளனர்.
அதிரடியை கிளப்பும் கூட்டம்..
இந்நிலையில் சினிமாவில் தனக்கென்று ரசிகர் கூட்டத்தை கோடிக்கணக்கில் சேர்த்து வைத்திருக்கிறார் விஜய். நிச்சயம் இந்த 2026 தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக பல ரசிகர்கள் திரண்டு இருக்கிறார்கள் என்பது விஜயின் பிறந்தநாள் அன்று ரசிகர்கள் வைத்திருக்கும் கட்டவுட், ரசிகர்கள் நெடுநேரம் விஜய்க்காக காத்திப்பு போன்றவற்றை வைத்தே தெரிகிறது.
இந்நிலையில் வலைத்தள பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
” பாஜகவுடன் இணையுங்கள் என்று விஜையிடம் கேட்டதற்கு முடியாது என்று உறுதியுடன் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். அதிமுக, திமுக மற்றும் தவெக இந்த மூன்று கட்சிகளும் மக்களிடம் பேச சென்றால் யாருக்கு ஆதரவு கிடைக்கும் என்றால் விஜய்க்கு தான். சினிமாவில் இருந்து ஒருவன் கட்சிக்கு வந்து மக்களை பார்க்கும் போது அவருக்கு தான் நிச்சயம் ஆதரவு கிடைக்கும். இதை அடுத்து அதிமுக, திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படும் வாய்ப்புள்ளது- வலைப்பேச்சு பிஸ்மி“