Vijay : சினிமாவில் தொடர்ந்து தனது திறமையின் மூலம் பல படங்களில் வெற்றி கண்டு சம்பளத்தை 300 கோடி வரைக்கும் உயர்த்தியவர் விஜய்.
2024 ஆம் ஆண்டு, விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்திற்கே ஒரு அதிர்ச்சி உண்டாக்கிய செய்தியாகும்.
சினிமாவில் இருந்தவனெல்லாம் தமிழ்நாட்டு முதல்வர் ஆகுவது சரியா? என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பும் வேளையில், அரசியலில் தன் வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறார் தளபதி.
விஜய் அரசியலுக்கு வந்ததுக்கு பிறகு எங்கள் கட்சியில் இணையுங்கள் என்று பாஜக கேட்டதும், மூஞ்சியில் அடித்த மாதிரி முடியாது என்று முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். தற்போது அதிமுகவும், திமுகவும் பீதியில் கலங்கி வருகிறது. விஜய் ஜெயிச்சு விட்டால் இத்தனை வருட அரசியல் வாழ்க்கை என்னாவது என்ற பயமும் இந்த இரு கட்சிகளின் கண்களில் தற்போது தென்படுகிறது.
விஜய் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயமாக 2026 தேர்தலில் வெற்றி பெறுவார் என்று 4 மாதங்களுக்கு முன்பு அரசியல் பிரமுகர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
இது உண்மையா..??
ஒருவேளை அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்து, திமுக அதே கூட்டணியில் இருந்து, தவெக விஜய் மட்டும் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் 2026 தேர்தலில் விஜய் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது. இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் உறுதியுடன் சொல்கிறேன்- பிரசாந்த் கிஷோர்.