Anirudh: அனிருத்துக்கு போட்டியாக சாய் அபயங்கர் வந்துவிட்டார் என்ற ஒரு பேச்சு ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அனிருத் அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
அதில் கூலி மதராசி கிங்டம் என லிஸ்ட் பெரிதாக இருக்கிறது. இருந்தாலும் தலைவர் படம் என்றாலே ஸ்பெஷல் தானே. அதற்காக மற்ற படங்களுக்கு ஓரவஞ்சனை செய்தால் நல்லாவா இருக்கு.
இப்படித்தான் அனிருத் பற்றி சத்தம் இல்லாமல் ஒரு பேச்சு இருக்கிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதாவது விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் கிங்டம் வரும் 31ஆம் தேதி வெளியாகிறது.
கூலிக்காக ஓரவஞ்சனை செய்த அனிருத்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் அதிக கவனம் பெற்றது. பாடல்களும் சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால் படத்தின் ரீரெக்கார்டிங் வேலையை அனிருத் செய்யவில்லை என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.
அந்த வேலையை அவருடைய உதவியாளரிடம் அவர் கொடுத்து விட்டாராம். இதற்கு காரணம் கூலி படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவது தான். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கான வேலைகளில் அவர் பிஸியாக இருக்கிறார்.
அதனால் விஜய் தேவரகொண்டா படத்தை அவர் டீலில் விட்டதெல்லாம் நியாயமே கிடையாது என அவருடைய ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதன் காரணமாகவே சாய் அபயங்கரை வளர்த்து விட அட்லி சிம்பு ஆகியோர் கிளம்பி விட்டதாக வெளிப்படையாகவே விமர்சகர்கள் கூறுகின்றனர். போற போக்கை பார்த்தா அனிருத் நிலைமை என்னவோ.